2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மக்கள் மனதை வென்றவர்கள் யார்..? பெரம்பலூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.
தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் தொகுதிகளில் முக்கியமானது, கிராமங்களை அதிகம் கொண்ட பெரம்பலூர்.
இங்கே திமுக சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு முதல் முறையாக களமிறங்கியிருக்கிறார்.
அதிமுக சார்பில் சந்திரமோகன் போட்டியிட, பாஜக கூட்டணியில் சிட்டிங் எம்.பி. ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி களத்தில் இருக்கிறார்.
திமுக, அதிமுக, பாஜக ஆகிய வேட்பாளர்களுக்கு இடையில் மும்முனைப் போட்டி நிலவும் நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.
உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.
இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.
18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது உங்கள் பார்வைக்கு..,
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான பெரம்பலூர், துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, குளித்தலை தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்
திமுக வேட்பாளர் அருண் நேரு 50% வாக்குகளைப் பெற்று பெரம்பலூர் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்லத் தயாராகிறார்.
அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 24% வாக்குகளையும்,
பாஜக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் 21% வாக்குகளையும் பெற்று இரண்டாம் இடத்துக்கு கடுமையாக மோதுகின்றனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன.
1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆக… பெரம்பலூரில் இம்முறை திமுகவின் கொடியே பிரகாசமாக பறக்கிறது.
மின்னம்பலம் நடத்தும் இந்த மெகா கருத்துக் கணிப்பில் மற்ற தொகுதிகளில் வெல்லப்போவது யார் என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் minnambalam.com வலைதளத்தில்…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்?
மின்னம்பலம் மெகா சர்வே: கரூரை கைப்பற்றப் போவது யார்?
மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்?
மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்?
மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம்… கள நாயகன் யார்?
пин ап официальный сайт: пин ап казино зеркало – пин ап казино вход
pin up https://pinupkz.tech/# пин ап 634
пин ап казино онлайн
pin up casino: pin up guncel giris – pin up casino giris
உங்கள் கருத்துக்கணிப்பை குப்பையில் போடவும்,
Nehru kudumbam trichy ku enna enna paNinanganu makkal அறிவார்கள்.
இந்த லட்சணத்தில் permabalur தொகுதி கு என்ன கிலிகபோராங்கலம்?
பொறுத்திருங்கள் காலம் பதில் சொல்லும்.
நூறு சதவீதம் திமுக னு சொல்
லிட்டு போங்கடா pannadankala