2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.
மத்திய சென்னையில் மகுடம் சூடப் போவது யார் என்ற கேள்வியோடு களமிறங்கினோம்.
இந்த தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் மீண்டும் களமிறங்கியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் ப.பார்த்தசாரதி போட்டியிடுகிறார்.
பாஜக சார்பில் வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.கார்த்திகேயன் போட்டியிடுகிறார்.
திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.
இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.
18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்
திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 52% வாக்குகளைப் பெற்று மீண்டும் மத்திய சென்னை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.
தேமுதிக வேட்பாளர் ப.பார்த்தசாரதி 23% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்
பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.கார்த்திகேயன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன.
1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆக, மத்திய சென்னை தொகுதியில் இந்த முறையும் தயாநிதி மாறன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே வாய்ப்புள்ளது.
மின்னம்பலம் சர்வே முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் minnambalam.com வலைதளத்தில்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: டூர் செல்கிறீர்களா… உணவு விஷயத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ!
IPL 2024 : மீண்டும் போராடி தோற்ற பஞ்சாப்… த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!
மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு?
மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?