மின்னம்பலம் மெகா சர்வே: கரூரை கைப்பற்றப் போவது யார்?

40 தொகுதி மெகா சர்வே முடிவு அரசியல்

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

இந்த தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணி மீண்டும் களமிறங்கியுள்ளார்.

அதிமுக சார்பில் தங்கவேல் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரெ.கருப்பையா போட்டியிடுகிறார்.

காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்

களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கரூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.

18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான வேடசந்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர்,  விராலிமலை மற்றும் மணப்பாறை  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் கரூர் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

அதிமுக வேட்பாளர் தங்கவேல் 32% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெ.கருப்பையா 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆக…, கரூர் தொகுதியில் இந்த முறையும் ஜோதிமணி வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம்… கள நாயகன் யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி…. வெற்றிச் சாரல் யார் மீது?

+1
1
+1
1
+1
1
+1
3
+1
5
+1
3
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *