மின்னம்பலம் மெகா சர்வே: ராமநாதபுரம்…சேது பூமியில் சாதிப்பவர் யார்?

40 தொகுதி மெகா சர்வே முடிவு அரசியல்

2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ராமநாதபுரம் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. 

இந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சந்திரபிரபா ஜெயபால் போட்டியிடுகிறார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அதிமுக, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்

களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  ராமநாதபுரம்,  முதுகுளத்தூர், அறந்தாங்கி,  பரமக்குடி (தனி),  திருச்சுழி மற்றும் திருவாடனை பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… 

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் 27% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 22% வாக்குகளைப் பெறுவார் என்றும் 

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரபா ஜெயபால் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆக…, ராமநாதபுரம் தொகுதியில் இந்த முறை நவாஸ்கனி வெற்றி பெற்று மீண்டும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: தேனி… யார் திசையில் வெற்றிக் காற்று?

மின்னம்பலம் மெகா சர்வே: தர்மபுரி… தட்டிப் பறிப்பது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: நீலகிரி… சிகரம் தொடுவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: சிதம்பரம்… மக்கள் மனதின் ரகசியம் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *