மின்னம்பலம் மெகா சர்வே: பொள்ளாச்சியில் யார் ஆட்சி?
2024 மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் மின்னம்பலம், மக்களை சந்தித்து கருத்து கணிப்பு நடத்திய நிலையில், கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான பொள்ளாச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கேள்விக்காக இயற்கை எழில் சூழ்ந்த பொள்ளாச்சியில் களமிறங்கினோம்.
இந்த தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வசந்தராஜன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் நா.சுரேஷ்குமார் போட்டியிடுகிறார்.
திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிற சூழலில்… பொள்ளாச்சியில் யார் ‘ஆட்சி’ அமைக்கப் போகிறார்? மக்களின் வாக்குகள் யாருக்கு? போன்ற கேள்விகளை பரவலாக பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.
இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…
திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 45% வாக்குகளைப் பெற்று பொள்ளாச்சி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார்.
அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 35% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.
பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 14% வாக்குகளைப் பெறுகிறார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நா.சுரேஷ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்று மக்களின் குரல் மூலம் தெரியவருகிறது .
1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆக…,பொள்ளாச்சி தொகுதியில் இந்த முறை திமுகவின் ஈஸ்வரசாமி வெற்றி பெறுவார் என்பதே மக்களின் கணக்காக இருக்கிறது.
மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் minnambalam.com வலைதளத்தில்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தலில் மக்களின் ஈடுபாடு: கருத்தியல் யுத்தமா? வாழ்வாதார பிரச்சினைகளா?
ஹெல்த் டிப்ஸ்: கோடைக்கு உதவும் கூல் பானங்கள் இதோ!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
மின்னம்பலம் மெகா சர்வே : மத்திய சென்னை… மகுடம் சூடப் போவது யார்?