கூட்டணி பற்றி விவாதிக்கிறோம்: கமல் புது முடிவு!

Published On:

| By Kalai

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் நிர்வாகிகளுடன் இன்று (நவம்பர் 16) ஆலோசனையில் ஈடுபட்டார்.

2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

ADVERTISEMENT

அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவிட்டது.

அதன் ஒரு பகுதியாக கட்சி நிர்வாகிகளோடு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

மாவட்ட செயலாளர்கள்,மாநில நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை கமல்ஹாசன் வழங்கினார்.

ADVERTISEMENT
2024 election Kamalhaasan strategy for mnm administrators

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமலஹாசன், “2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் பேசினோம். கூட்டணி குறித்து விவாதித்துக் கொண்டுள்ளோம்.

இப்போது, விவரிக்க முடியாது. தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்தாலும் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும்.

கடந்த முறை செய்த தவறுகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் செய்யக் கூடாது என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்” என்று கூறினார்.

மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு 4 வருடம் ஆன நிலையில் இதுவரை இரண்டு பொது தேர்தல்களை சந்தித்துள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெற்றி கிடைக்காத நிலையில் வர உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கான வியூகங்கள் வகுப்பது குறித்து கமல்ஹாசன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

கலை.ரா

“திராவிடர் என்ற இனம் இல்லை”- ஆளுநர் ரவி பேச்சு!

நீண்ட போராட்டத்துக்கு பின் சீறி பாய்ந்த ஆர்டெமிஸ் 1!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share