highest box office collection movies list
2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் பட்டியலை ஐ.எம்.டி.பி (IMDb) வெளியிட்டுள்ளது .
இந்த பட்டியலில் எந்தெந்த படங்களெல்லாம் இடம் பிடித்துள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.
இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் நடிகர் ஷாருக்கானின் ’ஜவான்’ மற்றும் ’பதான்’ ஆகிய படங்கள் உள்ளது. ஜவான் படம் 1152 கோடி ரூபாய் வசூல் செய்து முதல் இடத்திலும், பதான் படம் 1050 கோடி ரூபாய் வசூல் செய்து இரண்டாவது இடத்திலும் உள்ளது.
ஒரே ஆண்டில் இரண்டு படங்களை வெளியிட்டு இரண்டு படங்களிலும் தனி தனியாக 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து காட்டி புதிய சாதனையை படைத்துள்ளார் ஷாருக்கான்.
ஜவான், பதான் படங்களை தொடர்ந்து ரன்பீர் கபூரின் ’அனிமல்’ படம் 835 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
அடுத்ததாக சன்னி தியோலின் ’காதர் 2’ படம் 687 கோடி ரூபாய் வசூல் செய்து 4 வது இடத்தில் உள்ளது.
இதனை தொடர்ந்து 5 மற்றும் 6 வது இடங்களை தமிழ் படங்கள் பிடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியான ’லியோ’ 616 கோடி ரூபாய் வசூல் செய்து 5 வது இடத்தில் உள்ளது. நெல்சன் – ரஜினி கூட்டணியில் வெளியான ’ஜெயிலர்’ 605 கோடி ரூபாய் வசூல் செய்து 6 வது இடத்தை பிடித்துள்ளது.
இதனை தொடர்ந்து 466 கோடி ரூபாய் வசூலுடன் சல்மான் கானின் ’டைகர் 3’ 7 வது இடத்திலும், 395 கோடி ரூபாய் வசூலுடன் பிரபாஸின் ’ஆதிபுருஷ்’ 8 வது இடத்திலும், 357 கோடி ரூபாய் வசூலுடன் ரன்வீர் சிங்கின் ’rocky aur rani kii prem kahaani’ படம் 9 வது இடத்திலும், 344 கோடி ரூபாய் வசூலுடன் மணி ரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன் 2’ 10 வது இடத்திலும் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
அதிகரிக்கும் கொரோனா: கலக்கத்தில் தெலங்கானா
வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: 3 நாட்களுக்கு பின்னர் மீட்பு!
highest box office collection movies list