2023-24 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று (நவம்பர் 16) வெளியிடப்பட்டுள்ளது. 2023-24 General Exam Schedule
நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி,
செய்முறைத் தேர்வுகள்
10 ஆம் வகுப்பிற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 முதல் 29 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. 11 ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 19 முதல் 24 ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளது. 12 ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 12 முதல் 17 ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளது.
பொதுத் தேர்வு தேதிகள்
10 ஆம் வகுப்பிற்கு அடுத்த ஆண்டு மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது.
தமிழ், இதர மொழிப்பாடம் – மார்ச் 26
ஆங்கிலம் – மார்ச் 28
கணிதம் – ஏப்ரல் 1
அறிவியல் – ஏப்ரல் 4
சமூக அறிவியல் – ஏப்ரல் 8
11 ஆம் வகுப்பிற்கு மார்ச் 4 முதல் 25 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.
மொழிப்பாடம் – மார்ச் 4
ஆங்கிலம் – மார்ச் 7
இயற்பியல், பொருளியல் – மார்ச் 12
கணினி அறிவியல் – மார்ச் 14
உயிரியல், தாவரவியல், வரலாறு – மார்ச் 18
வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் – மார்ச் 21
கணிதம், விலங்கியல், பொருளியல் – மார்ச் 25
12 ஆம் வகுப்பிற்கு மார்ச் 1 முதல் 22 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.
மொழிப்பாடம் – மார்ச் 1
ஆங்கிலம் – மார்ச் 5
கணினி அறிவியல் – மார்ச் 8
கணக்கு பதிவியல், வேதியியல், புவியியல் – மார்ச் 11
இயற்பியல், பொருளியல் – மார்ச் 15
கணிதம், விலங்கியல், வணிகவியல் – மார்ச் 19
உயிரியல், விலங்கியல், வரலாறு – மார்ச் 22
தேர்வு முடிவுகள்
12 ஆம் வகுப்பிற்கு மே 6 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பிற்கு மே 14 ஆம் தேதியும் 10 ஆம் வகுப்பிற்கு மே 10 ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
அட்டவணையை வெளியிட்டுப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேதிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் பொதுத்தேர்விற்கு முழுமையாக தயாராக வேண்டும். தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்பு ஹால் டிக்கெட் வழங்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஹால் டிக்கெட் வந்த பிறகு தான் மொத்தம் எத்தனை பேர் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள் என்பது தெரிய வரும்.

மக்களவைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தான் இந்த தேதிகளை தற்போது அறிவித்துள்ளோம். மாவட்ட வாரியாக அனைத்து மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியருடன் சூம் மீட்டிங்கில் பேச உள்ளேன்.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சிறந்த முடிவுகள் வர வேண்டும். கடந்த ஆண்டு எந்த பாடத்தில் மதிப்பெண்கள் குறைந்ததோ அந்த பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆலோசனைகளைத் தலைமை ஆசிரியர்களுடன் மேற்கொள்ள உள்ளோம்.
கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவர்கள் தேர்வு எழுதாமல் போய் விடக் கூடாது என்பதற்காக வருகை பதிவேடு கருத்தில் கொள்ளப்படவில்லை. ஆனால் இனி வரும் காலங்களில் வருகை பதிவேடு அவசியம். இருப்பினும் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்த நாட்கள் குறைவாக இருக்கிறது, ஆனால் அவர்களுக்கான மருத்துவ பின்னணி சரியாக இருந்தால், அதனைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். 2023-24 General Exam Schedule
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
Bigg Boss 7 Day 45 : போடா ‘Promo பொறுக்கி’… முட்டிக்கொண்ட தினேஷ் – விஷ்ணு!
