மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

பெண் ஐபிஎஸ் அதிகாரி விருப்ப ஓய்வு கேட்பது ஏன்?

பெண் ஐபிஎஸ் அதிகாரி விருப்ப ஓய்வு கேட்பது ஏன்?

தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி சு.லட்சுமி விருப்ப ஓய்வு கேட்டு டிஜிபி வாயிலாக அரசிடம் விண்ணப்பித்திருக்கிறார்.

தமிழக காவல்துறையில் டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தவர் சு.லட்சுமி. தற்போது சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக உள்ளார். 1997 பேட்ச் பிரிவைச் சேர்ந்தவர். சென்னை சட்டக் கல்லூரியில் பயின்ற லட்சுமி, வகுப்பு நண்பரான குமரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி அடைந்து நேரடியாக டிஎஸ்பி பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், அசோக் நகரில் பயிற்சிக்கு சென்றார். பயிற்சிக்கு செல்லும் போது சக நண்பர்களிடம், போலீசாக வேண்டும் என்பது என்னுடைய கனவு, எனினும் 20 ஆண்டுகளில் ராஜினாமா செய்துவிடுவேன் என அப்போதே கூறியிருக்கிறார்.

பயிற்சி முடித்துவிட்டு, திருவண்ணாமலைக்கு வந்த அவர், அங்கு நீண்ட காலம், டி.எஸ்.பி.யாக பணிபுரிந்தார். இவரது அக்கா ஒருவர் திருவண்ணாமலையில் மருத்துவராக பணியாற்றி வந்ததால், அவருடன் தங்கி பணிக்கு சென்று வந்திருக்கிறார். இவரது கணவர் குமரன் அதிமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து, சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

முன்னதாக, லட்சுமி விழுப்புரம் ஏடிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டார். அதுபோன்று சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளில் காவல்துறையில் முக்கிய பதவிகளில் பணியாற்றி வந்திருக்கிறார். தற்போது சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருக்கும் அவர், விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். சொந்த காரணங்களுக்காக அவர் விருப்ப ஓய்வு மனு தாக்கல் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லட்சுமி ஐபிஎஸ் விருப்ப ஓய்வு மனு கொடுத்துள்ள நிலையில், இந்த முடிவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என சக போலீசார் அறிவுறுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து நாம் விசாரித்ததில், “ தற்போது லட்சுமி ஐபிஎஸ் மூன்றாவது முறையாக விஆர்எஸ் கடிதம் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே இருமுறை கொடுத்த விஆர்எஸ் கடிதத்தை அவரே திரும்ப பெற்றார். அவர் விஆர்எஸ் கொடுப்பதற்குக் காரணம் சொந்த பிரச்சினைகள் தான். தன்னுடைய அதிகாரத்தில் குடும்பத்தினர் தலையிட்டு, அவப்பெயரை உருவாக்குகிறார்கள் என மனபுழுக்கத்துடன் சொல்லிக் கொண்டிருக்கிறார்” என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை நந்தனம் வர்த்தக மையத்தை முதல்வர் ஸ்டாலின், மே 7 ஆம் தேதி பார்வையிட்ட போது, அங்கு பந்தோபஸ்துக்கு சென்றிருக்கிறார் சு.லட்சுமி. அப்போது முதல்வர் அங்கிருந்து சென்றதும் அருகிலிருந்த இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் இனி தனக்கு டிஎஸ்ஆர் (டெய்லி ஸ்டேஷன் ரிப்போர்ட்) வாசிக்க வேண்டாம். விடுப்பில் செல்கிறேன் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வணங்காமுடி

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

வியாழன் 13 மே 2021