மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

கொரானா ஒழிப்பு: கேரளத்தை பாராட்டும் பிரதமர்!

கொரானா ஒழிப்பு:  கேரளத்தை பாராட்டும் பிரதமர்!

கேரளாவிற்கு மத்திய அரசு அளித்த கொரானா தடுப்புமருந்துகள் வீணாவதைப் பெருமளவு தடுத்து அதிக எண்ணிக்கையில் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். குறிப்பாக கேரள மருத்துவதுறையில் முன்களப் பணியாளர்களாக பணிபுரியும் செவிலியர்கள் பணி பாராட்டுக்குரியது.

கேரளத்திற்கு 73,38,806 தடுப்புமருந்துகளை மத்திய அரசு அனுப்பியது , ஆனால் நாங்கள் 74,26,164 பேருக்கு கொரானா தடுப்பூசியை செலுத்தியுள்ளோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனை சுட்டிக்காட்டிய இந்திய பிரதமர் மோடி கொரானாவுக்கு எதிரான போரில் கேரள மாநிலம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில்" தடுப்பூசி வீணாவதை தடுப்பதில் நமது சுகாதாரப் பணியாளர்கள், மற்றும் செவிலியர்கள் முன்மாதிரியாக விளங்குகின்றனர். தடுப்பூசிகள் வீணாவதை தடுப்பது கொரானாவுக்கு எதிரான போரில் மிகவும் முக்கியமானது" என்று பதிவிட்டுள்ளார்.

-ராமானுஜம்

அமித் ஷாவிடம் ஒகே சொன்ன ஓபிஎஸ்- அவகாசம் கேட்ட இபிஎஸ்

6 நிமிட வாசிப்பு

அமித் ஷாவிடம்  ஒகே சொன்ன ஓபிஎஸ்- அவகாசம் கேட்ட இபிஎஸ்

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்: அதிமுகவில் திடீர் திருப்பம்! ...

2 நிமிட வாசிப்பு

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்: அதிமுகவில் திடீர் திருப்பம்!

டிஜிபிக்கு எதிராக ஸ்டாலினுக்குக் காவலர்கள் எழுதிய கடிதம்!

7 நிமிட வாசிப்பு

டிஜிபிக்கு எதிராக ஸ்டாலினுக்குக் காவலர்கள் எழுதிய கடிதம்!

புதன் 5 மே 2021