மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 அக் 2020

கமல்ஹாசன் எங்கள் கூட்டணியில் இணையலாம்: கே.எஸ்.அழகிரி

கமல்ஹாசன் எங்கள் கூட்டணியில் இணையலாம்: கே.எஸ்.அழகிரி

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை தி.நகரில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. அதில், 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது தனித்துப் போட்டியிடுவது அல்லது ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது உள்ளிட்ட முடிவுகளை எடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அத்துடன், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்களவைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் கமல்ஹாசன் இணைய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விரும்பினார். இந்த நிலையில் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்ட சூழலில் அவர் திமுக கூட்டணியின் வாக்குகளைப் பிரிப்பாரா என கே.எஸ்.அழகிரியிடம் புதிய தலைமுறை சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “கமல்ஹாசன் மதச்சார்பற்ற இடதுசாரிக் கருத்துக்களைப் பேசுகிறார். ஆனால், அவரது அரசியல் பயணம் என்பது மதச்சார்பற்ற அணிக்கு உதவுவதாக இல்லை. மதச்சார்பற்ற அணி தமிழகத்தில் அமைக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளது” என்றார்.

மேலும், “மதவாதம் அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில் மதச்சார்பற்ற அணிக்கு பலம் சேர்க்காமல் தனித்து நிற்பது அந்த கொள்கையை சிதைத்துவிடும். மறைமுகமாக அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பயனளிக்கும். ஆகவே, கமல்ஹாசன் தனியாக போட்டியிடாமல் மதச்சார்பற்று இருக்கும் எங்களோடு இணைந்து தேர்தலை சந்திக்கலாம்” என்றும் கமல்ஹாசனுக்கு வலியுறுத்தியுள்ளார் கே.எஸ்.அழகிரி.

அமித் ஷாவிடம் ஒகே சொன்ன ஓபிஎஸ்- அவகாசம் கேட்ட இபிஎஸ்

6 நிமிட வாசிப்பு

அமித் ஷாவிடம்  ஒகே சொன்ன ஓபிஎஸ்- அவகாசம் கேட்ட இபிஎஸ்

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்: அதிமுகவில் திடீர் திருப்பம்! ...

2 நிமிட வாசிப்பு

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்: அதிமுகவில் திடீர் திருப்பம்!

டிஜிபிக்கு எதிராக ஸ்டாலினுக்குக் காவலர்கள் எழுதிய கடிதம்!

7 நிமிட வாசிப்பு

டிஜிபிக்கு எதிராக ஸ்டாலினுக்குக் காவலர்கள் எழுதிய கடிதம்!

ஞாயிறு 18 அக் 2020