மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஆக 2020

உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூல்: பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூல்: பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

உயர் நீதிமன்றம் உத்தரவை மீறி எந்தெந்த பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன என்ற பட்டியலைத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத போது, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணங்களை தனியார் பள்ளி நிர்வாகங்கள் வசூலித்து வருகின்றன. இந்நிலையில், தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என்று ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதற்கு, எதிராகத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஜூலை 17ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வேண்டுமென்றால் 75 சதவிகித கட்டணத்தை மூன்று தவணைகளாகப் பள்ளிகள் வசூலித்துக் கொள்ளலாம் என்று என்று தமிழக அரசு பதில் அளித்தது.

இதை விசாரித்த நீதிமன்றம், அரசு உதவி பெறாத அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் நடப்பு கல்வி ஆண்டில் முதல் தவணையாக 45 சதவிகித பள்ளிக் கட்டணங்கள் வசூலித்துக் கொள்ளலாம். இந்தக் கட்டணத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம். மீதமுள்ள தொகையைச் சூழ்நிலையைப் பொறுத்து வசூலிப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தது.

முதல் தவணையாக 40சதவிகிதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பள்ளிகள் முழு கட்டணத்தையும் வசூலிப்பதாகத் தமிழக அரசு வழக்கறிஞர் அன்னலட்சுமி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஆஜராகி முறையிட்டார்.

இதனை நேற்று (ஜூலை 31) விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எந்தெந்த பள்ளிகள் உத்தரவையும் மீறி கட்டணம் வசூலிக்கின்றன என்று ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் பள்ளிகள் முழு கட்டணத்தை வசூல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

சனி 1 ஆக 2020