மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 மே 2020

ஸ்டாலின் கோபம்: விபி துரைசாமி நீக்கம்!

ஸ்டாலின் கோபம்: விபி துரைசாமி நீக்கம்!

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் விபி துரைசாமி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 21) வெளியிட்டிருக்கிறார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி கடந்த மே மாதம் 18ஆம் தேதி தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம் சென்று தமிழக பாஜக தலைவர் எல். முருகனை சந்தித்தார். இது சர்ச்சையைக் கிளப்பியது. இதுதொடர்பாக [திமுகவில் மரியாதை இல்லை! - வி.பி. துரைசாமி -முருகன் சந்திப்பு பின்னணி!(]https://www.minnambalam.com/politics/2020/05/19/19/vp-duraisamy-meet-bjp-leader-murugan-behind-story) என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டோம்.

“சந்திப்பு தொடர்பாக தனக்கு நெருக்கமான திமுக புள்ளிகளிடம் பேசிய வி.பி.துரைசாமி, ‘தம்பீ... நாமக்கல் மாவட்டத்துல நான் துணைப் பொதுச் செயலாளர்னு இருக்கேன். காந்தி செல்வனை போட்டப்பயும் என்னைக் கேக்கல. இப்ப ராஜேஸ்குமாரை போட்டப்பவும் என்னைக் கேக்கலை. இதே நேரு மாவட்டமோ, ஐபி மாவட்டமோ இருந்தா இப்படி நடக்குமா தம்பி?’ எனக் கேள்வி எழுப்பினார்” என்று கூறியிருந்தோம். ராஜ்யசபா உறுப்பினர் சீட்டும் தரவில்லை எனத் தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்டோம்.

இரு நாட்களாக தன் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருந்த வி.பி. துரைசாமி இன்று (மே 21) தொலைக்காட்சி ஊடகங்களை தன் வீட்டுக்கு வரவைத்து தானாகவே பேட்டி கொடுத்தார்.

“எல்லா கட்சிகளுமே அரசியல் செய்கின்றன. இதில் என் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு கட்சியில் உயர் பொறுப்புக்கு வந்திருக்கும்போது அவரை நான் வாழ்த்தச் சென்றென். இதில் தவறேதும் இல்லை. கட்சியின் தலைவரிடம் பக்கத்தில் இருப்பவர்கள் ஏதாவது சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் நல்லவர்தான். ஆனால் கூட்டுப் பொறுப்பென்று வரும்போது அவர் நல்லவர் இல்லை. திமுகவில் எனக்கு எதிராக சதி நடந்தது. எனக்கு அங்கே மரியாதை இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் நான் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும்போதே மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் பற்றி என்னிடம் தகவல் கூட தெரிவிக்கப்பட்டது கிடையாது. நான் துணைப் பொதுச் செயலாளராக இருந்தபோது எந்த முடிவிலும் என்னை ஆலோசித்தது கிடையாது” என்றெல்லாம் ஒரு முடிவோடு சில கருத்துகளை எடுத்துரைத்தார்.

ஏற்கனவே வி.பி. துரைசாமி மீது கடும் கோபம் கொண்டிருந்த ஸ்டாலின்... இன்று ஊடகங்களில் அவரது பேட்டியைப் படித்ததும் உடனடியாக அவரை துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதோடு, யாரால் விபி துரைசாமி கோபம் அடைந்தாரோ அந்த அந்தியூர் செல்வராஜையே துணைப் பொதுச் செயலாளராகவும் நியமித்துள்ளார்.

பன்னீர், எடப்பாடி ஒற்றுமையில்லை-ஒற்றைத் தலைமை நான்தான்: சசிகலா ...

5 நிமிட வாசிப்பு

பன்னீர், எடப்பாடி ஒற்றுமையில்லை-ஒற்றைத் தலைமை நான்தான்: சசிகலா

நாங்கள் திருடர்களா?: நிதியமைச்சருக்கு விவசாயிகள் கண்டனம்!

8 நிமிட வாசிப்பு

நாங்கள் திருடர்களா?: நிதியமைச்சருக்கு விவசாயிகள் கண்டனம்!

ஜார்ஜ் பொன்னையா கைது: முழு பின்னணி!

11 நிமிட வாசிப்பு

ஜார்ஜ் பொன்னையா கைது: முழு பின்னணி!

வியாழன் 21 மே 2020