மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 பிப் 2020

“நான் இருபது வீரபாண்டிய கட்டபொம்மன்” -ராம மோகன ராவின் ‘தெலுங்குத் திட்டம்’

“நான் இருபது வீரபாண்டிய கட்டபொம்மன்”  -ராம  மோகன ராவின்  ‘தெலுங்குத் திட்டம்’

திருமலை நாயக்கரின் 437 ஆவது பிறந்தநாளை ஒட்டி மதுரையில் பிரமாண்டமான பேரணியை ஒருங்கிணைத்த முன்னாள் தலைமைச் செயலாளரான ராம மோகன ராவ், தனது அரசியலின் அடுத்த கட்டமாக சென்னையில் ஒரு கூட்டம் போட்டிருக்கிறார்.

பிப்ரவரி 12 ஆம் தேதி மாலை சென்னை அண்ணாநகரில் ஒரு அபார்ட்மெண்ட்டில் நாயுடு சமுதாய முன்னோடியான கெங்குசாமி நாயுடுவின் நினைவுதினத்தை ஒட்டி ராம மோகன ராவ் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் சென்னை, சென்னையை ஒட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி, கோவில்பட்டி என வெளிமாவட்ட நாயுடு, நாயக்கர் சமூகப் பிரமுகர்கள் திரண்டனர்.

கெங்குசாமி நாயுடு படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பலரும் பேசிய நிலையில் நிறைவுரையாற்றிய ராம மோகன ராவ் ஐ,ஏ. எஸ். தனது அரசியல் திட்டம் பற்றி விரிவாகவே பேசினார்.

“ரெண்டு மாசமா நான் போற இடமெல்லாம் எனக்கு நல்ல வரவேற்பு. எங்கே போனாலும் வரவேற்பு. நீங்க செய்யுங்க பின்னாடி இருக்கோம்னு சொல்றாங்க. நான் என்ன சொல்றேன்னா... நீங்க உங்களுக்குள்ள ஒத்துமையா இருங்கனு சொல்றேன். என்னை டவுன் பண்ணாம இருந்தாலே போதும்னு சொன்னேன். என்னை யாரும் டவுன் பண்ண முடியாது. நான் கரேஜான மேன். நான் பத்து மடங்கு விருப்பாச்சி கோபால் நாயக்கர் மாதிரிதான், இருபது பங்கு கட்டபொம்மன் மாதிரி.

ஈஸ்ட் இண்டியா கம்பெனிய எதிர்த்துப் போராடி நாசமாப் போனது தெலுங்கு நாயக்கர் சமுதாயம். பிரிட்டிஷ் கவர்ன்மெண்ட்டை எதிர்த்துப் போராடி நாசாமா போனதும் தெலுங்கு சமுதாயம்தான். அந்த 200 வருஷத்துல 72 பாளையக்காரர்கள்ல 50 பாளையக் காரர்களை தூக்குல போட்டாங்க. கோட்டைகளை தரை மட்டமாக்கினாங்க. பாளையக்காரங்ககிட்ட இருந்த குச்சியை கூட பிடுங்கிட்டுப் போயி ஈஸ்ட் இண்டியா கம்பெனியின் குடோன்ல போட்டுட்டாங்க. அதன் பிறகு நம்ம சமுதாயம் மெல்ல மெல்ல சீரழிஞ்சு விவசாயக் கூலியா ஆகிட்டாங்க.

அதேபோல இன்னொரு சைக்கிள் (சுழற்சி முறை) வரப் போகுது. இப்ப இருக்கிற பொருளாதாரம் அடுத்த தலைமுறைக்கு வரப் போறதில்லை. அதுக்காகத்தான் நாம ஒண்ணு சேரணும். பஞ்சாயத்து போர்டுலேர்ந்து பார்லிமெண்ட் வரைக்கும் நம்ம ஆட்களைக் கொண்டுபோக வேண்டும். ஆட்சி அதிகாரம் இல்லாமல் எதுவும் பண்ண முடியாது. நாயுடு ஜாதிக்கு மட்டுமில்ல.... அரசியல் அதிகாரம் இல்லாத சாதிகள் எல்லாருக்குமே நாம குரல் கொடுப்போம். நாயுடு என்றாலே நாயக்கர் என்றாலே லீட்ஸ் தலைமை தாங்கும் தளபதினு அர்த்தம். பிரநிதித்துவம் இல்லாத தமிழ் சமூகங்களை எல்லாம் சேர்த்துக்கிட்டு செயல்படுவோம்.

ஏற்கனவே நான் தலைவர்தான். நீங்க புதுசா என்னை தலைமையேத்துக்கங்கனு சொல்றீங்க. என்னோட ஆப்ஜெக்ட் என்னன்னா நாயுடு நாயக்கர் சமூகத்துலேந்து தலைவர்களை உருவாக்குறதுதான். பூந்தமல்லியில எம்.எல்.ஏ.வாக நிக்கப் போறேன்னு சொல்லி வாங்க. நான் டெவலப் பண்ணிவிடறேன். நானே வந்து தங்கி பிரச்சாரம் பண்றேன்.

இவர் ஐ.ஏ.எஸ். ஆபீசரா இருக்கும்போது தெலுங்கு மக்களுக்கு எதுவுமே செய்யலை. இப்ப ரிடையர்டு ஆன பிறகு பொழுது போக்குக்கு பேசிக்கிட்டிருக்காருனு என்னைப் பத்தி சிலர் விமர்சனம் பண்றாங்க. அவங்களை நான் கேட்குறேன்.... நீங்க என்ன செஞ்சீங்கனு சொல்லுங்க?

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் எல்லாருக்கும் தெரியும். தமிழ்நாடு பூராத்துலேந்தும் அங்க மக்கள் வர்றாங்க. டிஎம்கே ஆட்சியில ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர் கையெழுத்து போட்டு அதை அரசு கோயிலா மாத்திட்டாங்க. பரம்பரை பரம்பரையா கோயிலை நிர்வகிச்ச அந்த ஜமீன்லேந்து என்னை வந்து பார்த்தாங்க. நான் பிறகு ஜெயலலிதா மேடத்துக்கிட்ட சொன்னேன். நீங்க என்ன பண்ணலாம்னு சொல்லுங்கன்னாங்க. அதை திரும்ப அவங்ககிட்டயே கொடுத்துடலாம்னு சொன்னேன். ஒரே வார்த்தைதான். இந்த கோயிலுக்கு சொந்தமான 40 கோடி டெபாசிட்டை அந்த ஏசி சாப்பிடனும் அதான் அவரோட ஆப்ஜெக்ட். . ஆனால் அந்தக் கோயிலை மீண்டும் அந்த ஜமீனிடம் ஒப்படைத்தேன். என்னைக் கேள்வி கேக்குறவங்க இதுபோல செய்ய முடியுமா சொல்லுங்க?

ஒரு உதாரணத்துக்கு இதை சொல்றேன். அரசுப் பணியில இருந்தபோது நாம செய்யுறது வெளிய தெரிஞ்சா அடுத்த வேலையை நம்மை செய்யவிடமாட்டான். அதனால செஞ்சதைக் கூட வெளியே சொல்றதில்லை. பெரியபாளையம் கோயிலுக்கு அதன் பின் எத்தனையோ ஃபங்ஷனுக்கு என்னை கூப்பிட்டாங்க. நான் மறுத்துட்டேன். நான் அங்க போனா இவர் தான் பண்ணினாருனு பெட்டிஷன் போகும், அலிகேஷன் ஆகும்.

நான் எடுத்த சப்ஜெட் நாயுடு நாயக்கர் சமுதாயம் ஒரு குடைக்குள் வந்து அரசியல் போராட்டம் பண்ணனும். இல்லேன்னா எதிர்கால சமுதாயம் நமக்கு சிரார்த்தம் கூட போடமாட்டான். அதனாலதான் இப்ப இந்த முயசியை ஆரம்பிச்சிருக்கேன். நாம மட்டுமில்ல... அருந்ததியர், செட்டியார், ரெட்டியார்னு மினிமம் 25% ஓட்டு இருக்கு, ஆனா இந்த 25% ஓட்டு யாருக்கு போகுதுன்னே தெரியல. இந்த சமுதாயங்களுக்கு எதுவுமே நடக்கவில்லை. திமுகவுல ஆற்காடு வீராசாமி இருந்தாரு. அதிமுகவுல யாருமே இல்லை. இப்ப இருக்கிற அரசியல்ல நம்மால வார்டு மெம்பர் கூட ஆக முடியாது. உடனே சாதிக்கணும் கிடையாது. இப்ப நாம ஆரம்பிச்சா அது மெதுவா பத்திக்கும். என்னை நம்புங்க. எந்த தப்பும் பண்ண மாட்டோம். என்னை யாருமே விலைக்கு வாங்க முடியாது” என்று பேசி முடித்தார் ராம மோகன ராவ்.

இனி அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தி சென்னையில் அலுவலகம் திறந்து தன்னுடைய அரசியல் பயணத்தை விரிவுபடுத்தத் தயாராகிவிட்டார் முன்னாள் தலைமைச் செயலாளர்.

பன்னீர், எடப்பாடி ஒற்றுமையில்லை-ஒற்றைத் தலைமை நான்தான்: சசிகலா ...

5 நிமிட வாசிப்பு

பன்னீர், எடப்பாடி ஒற்றுமையில்லை-ஒற்றைத் தலைமை நான்தான்: சசிகலா

நாங்கள் திருடர்களா?: நிதியமைச்சருக்கு விவசாயிகள் கண்டனம்!

8 நிமிட வாசிப்பு

நாங்கள் திருடர்களா?: நிதியமைச்சருக்கு விவசாயிகள் கண்டனம்!

ஜார்ஜ் பொன்னையா கைது: முழு பின்னணி!

11 நிமிட வாசிப்பு

ஜார்ஜ் பொன்னையா கைது: முழு பின்னணி!

வியாழன் 13 பிப் 2020