மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 13 நவ 2019

மீளுயிர்ப்பு உதவி என்றால் என்ன?

மீளுயிர்ப்பு உதவி  என்றால் என்ன?

மெடிக்கல் செக் அப்- 6

இது ஒரு உயிர் காக்கும் நுட்பம், பல்வேறு காரணங்களால் இதயம் செயல் இழக்கும் போது நாம் உடனடியாக இதன்மூலம் உயிரை காப்பாற்ற முடியும்

இதயம் செயல் இழந்தால் என்ன ஆகும்?

இதயம் செயல் இழக்கும் போது மூளைக்கும் மற்ற முக்கிய உறுப்புகளுக்கும் உயிர்வாயு (ஆக்ஸிஜன்) கிடைக்காமல், சில நிமிடங்களில் இறக்க நேரிடும்.

மீளுயிர்ப்பு உதவியினால் என்ன பயன்?

சரியான மருத்துவ உதவி கிடைக்கும் வரை இதய நுரையீரல் இயக்க மீட்பு/ தூண்டல் செய்தால் மூளை மற்றும் அனைத்து முக்கிய உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் கொண்டு சேர்த்து உயிர்களை காப்பாற்ற முடியும்.

இதய செயல் இழக்க காரணங்கள் என்ன?

நீரில் மூழ்கினால், மாரடைப்பினால் இதய செயல் இழப்பு ஏற்படலாம்.

மீளுயிர்ப்பு உதவி யார் செய்யலாம்?

முறையாகப் பயற்சி பெற்ற அருகில் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

இதயம் செயல் இழப்பு எப்படி அடையாளம் கண்டு கொள்ளவது?

கீழே உள்ள படத்தில் உள்ளது போல கழுத்தில் கை வைத்து நாடி துடிப்பு இல்லை என்றால் இதய செயல் இழப்பு என்று அடையாளம் கண்டு கொள்ளலாம்.

இதய செயல் இழப்பு ஏற்பட்ட உடனே என்ன செய்ய வேண்டும்?

உடனடியாக 108 அழைக்க வேண்டும்.

வேறு என்ன செய்யலாம்?

மீளுயிர்ப்புக்கு நமக்கு தெரியாது என்றால் இதய அழுத்தம் மட்டுமே செய்ய வேண்டும்.

மீளுயிர்ப்பு உதவி எப்படி செய்ய வேண்டும்?

1. Scene safety - இதய செயல் இழப்பு ஏற்பட்ட நபரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும். அதாவது விபத்தில் சிக்கியவர்கள், நீரில் மூழ்கியவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிய பின் மீளுயிர்ப்பு உதவி ஆரம்பிக்க வேண்டும்.

2. நினைவு இருக்கிறதா என்று உறுதி படுத்த வேண்டும். தோளை உலுக்கி 'நீங்க நல்லா இருக்கீங்களா' என்று சத்தமாக கேட்க வேண்டும்.

3. நினைவு இல்லை என்று உறுதி படுத்திய உடன் 108 அழைத்து விட்டு, இதய நுரையீரல் இயக்க மீட்பு ஆரம்பிக்க வேண்டும்.

மீளுயிர்ப்பு உதவி செயல் முறை

1. பாதிக்கப்பட்ட நபர் சமன் தரையில் இருக்கிறார் என்று உறுதி படுத்த வேண்டும்.

2. நபரின் தோள் அருகே முட்டியிட்டு, மார்பு கூட்டு நடுவில் இரண்டு கைகளையும் ஓன்று மேல் ஒன்று வைத்து அழுத்த வேண்டும்.

3. முழங்கை மடிக்காமல் நமது தோளின் பலத்தை உபயோகப்படுத்தி 2 அங்குலம் உள்ளே போகும் படி அழுத்தம் தர வேண்டும்.

4. மீளுயிர்ப்பு உதவி நினைவு திரும்பும் வரை அல்லது மருத்துவ உதவி வரும் வரை தொடர வேண்டும். மீளுயிர்ப்பு உதவி பயிற்சி இல்லாமல் செயற்கை சுவாசம் செய்ய முயற்சி செய்ய கூடாது.

இந்த மீளுயிர்ப்பு உதவி எளிதில் கற்றுக்கொள்ள கூடியது இதை நாம் அனைவரும் அறிந்தால் பல உயிர்களை காப்பாற்றலாம்

((கட்டுரையாளர் குறிப்பு))

மருத்துவர் ரம்யா அய்யாதுரை

எம்.டி., டி.என்.பி., எம்.ஆர்.சி.பி (பொது மருத்துவம்)

மருத்துவ பேராசிரியர்

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலூர்.

சர்வதேச மருத்துவ ஆய்விதழ்களில் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர்.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

புதன் 13 நவ 2019