மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜூலை 2019

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!

உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியதை ரசிகர்களால் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

இந்த முறை உலகக்கோப்பையை வெல்லும் உத்தேச அணி எது என்று சர்வதேச கிரிக்கெட் வல்லுநர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக கணித்து வருகின்றனர். அதில் இந்திய அணியின் பெயர் தான் பெரும்பாலானவர்களால் கூறப்பட்டது. கோலி தலைமையிலான தற்போதைய அணி உலகின் எந்த மூலையில் ஆடினாலும் தங்கள் திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தி எதிர் அணியை வீழ்த்தும் சக்தி படைத்தது என்று பேசப்பட்டது.

அதற்கு வலு சேர்க்கும் விதமாகவே இந்த தொடரில் இந்திய அணியின் ஆட்டமும் அமைந்தது. லீக் போட்டிகளின் முடிவில் நம்பர் 1 இடத்தில் இருந்த அணி இப்படி துரதிர்ஷ்டவசமாக தோல்வியைச் சந்தித்து வெளியேறியது சோகமான விஷயம் என்றாலும் அதற்கான காரணங்களை ஆராய்வது அவசியம்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 240 என்ற இலக்கை விரட்ட இந்திய அணி மைதானத்துக்குள் நுழைந்த போது வெற்றிக்கான சதவீதம் எப்படி இருக்கிறது என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களைடையே கருத்து கேட்டிருந்தது. அதில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 98 சதவீதமாகவும், நியூசிலாந்து அணிக்கு 2 சதவீதமாகவும் இருந்தது. அடுத்த இருபது நிமிடங்களில் இந்த நிலை தலைகீழாக மாறியது.

எளிதாக விரட்டக் கூடிய ஸ்கோர், பலம் வாய்ந்த முன்வரிசை வீரர்கள் இருந்தபோதும் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் இல்லாமல் போனது. தொடர் முழுக்க முன்வரிசை வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுத்தந்த போதும் நடுவரிசை வீரர்களின் சொதப்பலான ஆட்டம் விமர்சனத்துக்குள்ளாகியே வந்தது. அதை இந்திய அணி சரி செய்யாததன் காரணமாக நாக் அவுட் சுற்றில் வெளியேறி கோப்பைக் கனவை பொசுக்கிவிட்டு நாடு திரும்பவுள்ளனர்.

வழக்கத்துக்கு மாறாக முன்வரிசை வீரர்களான ராகுல், ரோஹித், கோலி ஆகியோர் தலா 1 ரன்களில் வெளியேறினாலும் ஆட்டம் கைவிட்டுப் போய்விடவில்லை. நிலைமையை புரிந்து நின்றிருக்க வேண்டிய நடுவரிசை வீரர்கள் அவர்களை பின்தொடர்ந்து பெவிலியனை நோக்கி சென்றது தோல்விக்கான முக்கிய காரணம்,

சச்சின் டெண்டுல்கரும் இதையே கூறுகிறார். “240 எனும் இலக்கை சந்தேகம் இன்றி இந்தியா நிச்சயம் அடைந்திருக்க முடியும். இது பெரிய ஸ்கோர் அல்ல. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்துவிட்டனர்.

அணி எப்போதும் ரோகித், விராட் கோலி ஆகியோரையே நம்பிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள்தான் சிறப்பான தொடக்கம் கொடுத்திருக்க வேண்டும் என்றும் சொல்லக் கூடாது. அணியில் அனைவருக்குமே பொறுப்பு உண்டு” என்று கூறியுள்ளார்.

தோனியும் ஜடேஜாவும் மிகவும் போராடி அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றனர். ஜடேஜாவின் அதிரடி, தோனியின் நிதானம் இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையைத் தந்தது. ஆனால் அந்த நேரத்திலும் நியூசிலாந்து அணி வீரர்களின் பக்குவமான ஆட்டம் வெற்றியை அவர்களுக்குப் பெற்றுத்தந்தது.

மழை குறுக்கிடாமல் இருந்திருந்தாலும் இந்திய அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு இருந்திருக்கும். முதல் நாளே இந்திய அணி ஆடியிருந்தால் நியூசிலாந்து வீரர்களுக்கு திட்டமிடுதலுக்கான காலம் இருந்திருக்காது. மேலும் ஸ்லோ பிட்ச் மற்றும் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் இந்திய அணியால் இலக்கை விரட்டுவது முடியாமல் போனது.

இந்தக் காரணங்கள் எல்லாம் இருப்பினும் தோல்விக்கான வாய்ப்புகளே அதிகம் இருந்த நியூசிலாந்து அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி யூகங்களை உடைத்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருப்பது பாராட்டப்படவேண்டியது.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

அஜித் சம்பளம் 100 கோடியா?


கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

வியாழன் 11 ஜூலை 2019