மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜூலை 2019

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

மகனுக்காக  வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், இன்று (ஜூலை 11) முதல் வேலூர் தொகுதிக்கு வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. அதிமுக, திமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் ஆகியோரே மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளரான புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் ஆகியோர் தொகுதியில் ஊழியர்கள் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துவிட்டனர்.

திமுக பொருளாளர் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்துக்காக வேலூரில் முகாமிட்டிருக்கிறர். திமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாக டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், மற்றும் வேலூர் மாவட்டச் செயலாளர்களான ஆர்.காந்தி, நந்தகுமார், முத்தமிழ்ச்செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிக்கும் பொன்முடி, ஐ.பெரியசாமி. கே.என் நேரு, தா.மோ. அன்பரசன், எ.வ.வேலு, ஈரோடு முத்துசாமி ஆகியோரை தேர்தல் பணிப்பொறுப்பாளர்களாக நியமித்து அவர்களுக்கென குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் சென்ற துரைமுருகன் தேர்தல் பொறுப்பாளர்களில் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோர் நாடாளுமன்றத்தில் இருப்பதால் மீதமுள்ள பொறுப்பாளர்களான, வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராணிப்பேட்டை ஆர். காந்தி, மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி. நந்தகுமார் ஆகியோரோடு முதல் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் முதல்கட்டமாக வழக்கமாகத் தாம் சந்திக்கும் முஸ்லிம் பிரமுகர்களையும் சந்திக்கத் தொடங்கிவிட்டார் துரைமுருகன்.

அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அணைக்கட்டு தொகுதியில் ஊழியர் கூட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

வியாழன் 11 ஜூலை 2019