மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 மே 2019

திமுக: ராஜ்ய சபாவுக்குச் செல்பவர்கள் யார்?

திமுக: ராஜ்ய சபாவுக்குச் செல்பவர்கள் யார்?

நடந்து முடிந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் 13 தொகுதிகளை திமுக வென்றது. இதையடுத்து திமுகவுக்கு இப்போது தமிழக சட்டமன்றத்தில் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் 109 பேர் இருக்கிறார்கள்.

வரும் ஜூலை மாதம் தமிழகத்தில் ஆறு ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவதை ஒட்டி திமுகவுக்கு மூன்று உறுப்பினர்கள், அதிமுகவுக்கு மூன்று உறுப்பினர்கள் என்று ராஜ்ய சபாவுக்கு அனுப்பும் வாய்ப்பிருக்கிறது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மதிமுகவுக்கு ஒரு ராஜ்ய சபா இடம் அளிப்பது என்று மக்களவைத் தேர்தல் கூட்டணியின்போதே ஒப்பந்தம் ஏற்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக சார்பாக ராஜ்ய சபாவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் இரண்டு உறுப்பினர்கள் திமுகவில் இருந்து அனுப்பப்படுவார்கள் என்ற நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக் காலம் முடிவடைவதால் அவரை தமிழகத்தில் திமுக கோட்டாவில் இருந்து ராஜ்ய சபாவுக்கு அனுப்பலாமா என்ற விவாதமும் நடந்து வருகிறது. ஆனால், காங்கிரஸுக்கு மக்களவைத் தேர்தலிலேயே 10 சீட்டுகள் ஒதுக்கிவிட்ட நிலையில் ஒரு ராஜ்ய சபாவையும் ஒதுக்கத் தேவையில்லை என்று திமுக சீனியர்கள் ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார்கள். வைகோ தவிர மீதி இரண்டு இடங்களிலும் திமுகவினரே நிரப்படப்பட வேண்டும் என்றும் அவர்கள் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

அந்த இரண்டு இடங்களுக்கு திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது.

திமுகவின் தொழிற்சங்கமான தொமுசவின் பொதுச்செயலாளர் சண்முகம், திமுக வழக்கறிஞர் பிரிவின் சட்ட ஆலோசகரும், 2014ஆம் ஆண்டு அரக்கோணம் தொகுதி மக்களவை வேட்பாளருமான என்.ஆர். இளங்கோ, அண்மையில் தேமுதிகவில் இருந்து திமுகவுக்கு வந்தவரும் திமுக செய்தித் தொடர்புத்துறைச் செயலாளருமான கான்ஸ்டான்டைன் ரவீந்திரன் ஆகியோர் ராஜ்ய சபா ரேஸில் இருக்கின்றனர்.

கொங்குமண்டலத்தை வலிமைப்படுத்த திமுக திட்டமிட்டு வரும் நிலையில் துணைப் பொதுச் செயலாளரும் கொங்கு பகுதிக்காரருமான சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு முத்துசாமி ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பிருக்கும் என்றும் திமுக வட்டாரத்தில் தகவல்கள் கிடைக்கின்றன. அதேநேரம் வழக்கறிஞரும், திமுக செய்தித் தொடர்பாளரும் அரசியல் ஆய்வாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கும் ராஜ்ய சபா வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள் அறிவாலயத்தில்.

வைகோ தவிர மீதி இரண்டு இடங்களுக்கு இத்தனை பேரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்து வருகின்றன.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்

.

அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!

.

அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!

.

ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?

.

தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!

.

.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

செவ்வாய் 28 மே 2019