மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜன 2019

குளிர் மேலும் அதிகரிக்கும்!

குளிர் மேலும் அதிகரிக்கும்!

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிக அதிகளவில் குளிர் பதிவாகியுள்ளது. வரும் 12, 13ஆம் தேதிகளில் இது மேலும் அதிகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்தைவிட 55 சதவிகிதம் அளவுக்குக் குறைந்தது. இந்த நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளைக் குளிர் மிகக்கடுமையாகப் பாதித்துள்ளது. சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம், நீலகிரி மற்றும் மலைப் பிரதேச மாவட்டங்களில் அதிகளவில் குளிர் உள்ளது. குறிப்பாக, ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உறைபனி உண்டாகியுள்ளது. வால்பாறையில் 5 டிகிரி செல்சியஸுக்கு குறைவாகவே வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வரும் நாட்களைப் பொறுத்தவரை குளிர் தொடர்ந்து நீடிக்குமென்றும், வறண்ட வானிலை இருக்குமென்றும் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தமிழகத்தை வாட்டும் குளிர் வரும் 13ஆம் தேதி வரை தொடரும் என்று கூறியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதே நேரத்தில், வரும் ஜனவரி 12, 13ஆம் தேதிகளில் தமிழகத்தில் குளிர் கடுமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர் வானிலை ஆர்வலர்கள்.

வடமாநிலங்களில் அதிகளவில் குளிர் நிலவுவதாலும், அங்கிருந்து வீசும் காற்றாலும் தமிழகத்தை குளிர் வாட்டுவதாகக் கூறப்படுகிறது. “விதர்பா, மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் குளிர் கடுமையான அளவில் பதிவாகும். பஞ்சாப் பகுதியில் கடுங்குளிருடன் உறைபனி நிலையும் சில இடங்களில் நீடிக்கிறது” என்று தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். உத்தராகண்ட் மாநிலத்தில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. ராஜஸ்தான், டெல்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு மத்தியப் பிரதேசம் பகுதிகளில் மிதமான மூடுபனி நிலவுகிறது.

இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் சில இடங்களில் குறைந்தபட்சமாக 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5.0 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை குறைந்துள்ளது. இதன் விளைவாக, நேற்று (ஜனவரி 9) நாட்டின் பெரும்பாலான இடங்களில் இயல்பு வெப்ப நிலை வெகுவாகக் குறைந்துள்ளது.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

வியாழன் 10 ஜன 2019