மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 டிச 2018

மந்தமான நிலையில் பயிர் சாகுபடி!

மந்தமான நிலையில் பயிர் சாகுபடி!

இந்த ஆண்டில் ரபி பருவ விதைப்பு 32 லட்சம் ஹெக்டேர் அளவுக்குக் குறைந்துவிட்டது.

இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடப்பு ரபி பருவத்தில் இதுவரையில் 355 லட்சம் ஹெக்டேரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 32 லட்சம் ஹெக்டேர் குறைவாகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் 387 லட்சம் ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. போதிய மழைப் பொழிவு இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், மகாராஷ்டிராவின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் ரபி சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல, உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிலும் இன்னும் சில பகுதிகளில் சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. அதனால்தான் பயிர் விதைப்புப் பரப்பு குறைந்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுவரையில் கடுகு மற்றும் எண்ணெய் வித்துகள் சாகுபடி மட்டுமே கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையில் 57.89 லட்சம் ஹெக்டேரில் கடுகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4.29 விழுக்காடு அதிகமாகும். அதேபோல, எண்ணெய் வித்துகள் சாகுபடி கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.38 விழுக்காடு அதிகரித்து 63.14 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. ஆனால், நெல் சாகுபடி 30.27 விழுக்காடு சரிவுடன் 7.33 லட்சம் ஹெக்டேரிலும், தானியங்கள் 27.08 விழுக்காடு சரிவுடன் 29.64 லட்சம் ஹெக்டேரிலும், சோளம் 33.11 விழுக்காடு சரிவுடன் 17.84 லட்சம் ஹெக்டேரிலும், உளுந்து 15.13 விழுக்காடு சரிவுடன் 70.46 லட்சம் ஹெக்டேரிலும், பார்லே 14.78 விழுக்காடு சரிவுடன் 4.35 லட்சம் ஹெக்டேரிலும், மக்காச்சோளம் 13.53 விழுக்காடு சரிவுடன் 7.22 லட்சம் ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

ஞாயிறு 2 டிச 2018