மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 அக் 2018

ஊட்டச்சத்துக் குறைபாடு: குழந்தைகளிடம் அதிகரிப்பு!

ஊட்டச்சத்துக் குறைபாடு: குழந்தைகளிடம் அதிகரிப்பு!

இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் எடை குறைவாக உள்ள குழந்தைகள் விகிதம் 21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 85 கோடியாக அதிகரித்துள்ளதாகப் பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. உலக நாடுகளில் பசியாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் வாடுவோர் பற்றி ஆய்வு செய்து, இந்த பட்டியலை வெளியிட்டது. 119 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில், இந்தியா 109ஆவது இடத்தில் உள்ளது. பசியால் வாடும் மக்களில் 4 கோடி பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 21 சதவிகிதக் குழந்தைகள், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் உயரத்துக்கேற்ற எடையில்லாமல் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2000ஆவது ஆண்டில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் எடை குறைவாக உள்ள குழந்தைகள் விகிதம் 17 சதவிகிதமாகவும், 2005ஆம் ஆண்டில் 20 சதவிகிதமாகவும் இருந்தது. 2018ஆம் ஆண்டில் 21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

வெள்ளி 12 அக் 2018