மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 செப் 2018

மனைவி மரணம்: நவாஸுக்கு பரோல்?

மனைவி மரணம்: நவாஸுக்கு பரோல்?

லண்டனில் சிகிச்சைப் பெற்றுவந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீஃபின் மனைவி பேகன் குல்சூம் இன்று மரணமடைந்தார்.

பாகிஸ்தானின் பிரதமராக 3 முறை இருந்தவர் நவாஸ் செரீஃப். இவர் மீது 3 ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. லண்டனில் அவன்பீல்டு அடுக்குமாடி சொகுசு இல்லம் வாங்கிய வழக்கில், நவாஸ் ஷெரிப், மகள் மரியம் மற்றும் அவரது கணவர் என 3 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நவாஸின் மனைவி பேகம் குல்சூம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக லண்டனில் உள்ள ஹார்லி ஸ்டிரீட் கிளினிக்கில் சிகிச்சைப் பெற்றுவந்தார். நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பேகம் குல்சூம் இன்று(செப்டம்பர் 11) காலமானார். அவரது உடலை பாகிஸ்தான் கொண்டுவந்து அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பேகம் குல்சூமின் மரணத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ராணுவ தளபதி கியூமர் ஜாவத் பாஜ்வா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக நவாஸ் செரீஃபின் சகோதரரும் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான செபாஸ் செரீஃப் வேதனைத் தெரிவித்துள்ளார்.

நவாஸின் ஆட்சி முந்தைய அதிபர் முசரப் மூலம் கலைக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டபோது, 1992-2002ஆம் ஆண்டுவரை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக பேகம் குல்சூம் இருந்துள்ளார்.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

செவ்வாய் 11 செப் 2018