மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

பிரியங்காவிற்கு மாற்று கேத்ரினா

பிரியங்காவிற்கு மாற்று கேத்ரினா

சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் ‘பாரத்’ படத்திலிருந்து பிரியங்கா சோப்ரா விலகியதை அடுத்து, அப்படத்தில் நடிகை கேத்ரினா கைஃப் இணைந்திருக்கிறார்.

பாலிவுட்டில் ‘ரேஸ் 3’ படத்திற்குப் பிறகு சல்மான் கான் நடிப்பில் உருவாகும் படம் ‘பாரத்’. 2014ஆம் ஆண்டு வெளியான ‘ஒடி டு மை ஃபாதர்’ என்ற தென் கொரியத் திரைப்படத்தை தழுவி உருவாகிறது. இப்படத்தின் மூலம் சல்மான் கான் மூன்றாவது முறையாக அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதுல் அக்னிகோத்ரி, அல்விரா கான் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் நடிகைகள் திஷா பதானி, தபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சல்மான் கானின் படங்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும். அதே போல் இப்படத்தை அடுத்த ஆண்டு (2019) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே சல்மான் கானின் படங்களான, பாஜ்ரங்கி பாய்ஜான் (2015), சுல்தான் (2016), டியூப் லைட்டு (2017), ரேஸ் 3 (2018) ஆகிய படங்கள் ரம்ஜானில் வெளியாகி 100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு ‘பாரத்’ திரைப்படத்தையும் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

திங்கள் 30 ஜூலை 2018