மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

கடத்தல் என்னும் கொடுமை!

கடத்தல் என்னும் கொடுமை!

தினப் பெட்டகம் – 10 (30.07.2018)

இன்று தனிநபர்களின் கடத்தலுக்கு எதிரான நாள் (World Day against Trafficking Persons). உலக அளவில் தனி நபர் கடத்தல் குறித்த தகவல்கள்:

1. மனிதக் கடத்தல் என்பது குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று பலரையும் வேலைக்காகவும், பாலியல் தொழிலுக்காகவும் கடத்தி வியாபாரம் செய்வதைக் குறிக்கிறது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, ஆண்டொன்றுக்கு 21 மில்லியன் மக்களுக்கும் அதிகமானவர்கள் கடத்தப்படுவதாகத் தெரிவிக்கிறது.

2. இப்படிக் கடத்தப்படுபவர்களில் பெண்களும் குழந்தைகளும் 71%.

3. கடத்தப்படும் நபர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் குழந்தைகள்.

4. நவீனமயமாக்கப்பட்ட அடிமைத்தனம், பாலியல் தொழில் ஆகியவற்றில் 55% பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள்; 45% ஆண்கள் மற்றும் ஆண் குழந்தைகள்.

5. உலக அளவில் அதிகமான தனிமனிதக் கடத்தல்கள் இந்தியாவில் நிகழ்கின்றன.

6. நம் நாட்டில் சராசரியாக ஒவ்வோர் எட்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போகிறது.

7. தேசிய மனித உரிமை ஆணையம், ஆண்டுதோறும் 40,000 குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், அவற்றில் 11,000 குழந்தைகளைக் கண்டுபிடிக்கவே முடியாமல் போவதாகவும் குறிப்பிடுகிறது.

8. இந்தியாவில், கடத்தல் தொழில் அதிகம் நடக்கும் மாநிலங்கள்: மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரா.

9. மனிதர்களைக் கடத்துவது என்பது கடுமையான குற்றம்; மனித உரிமைகளின் கடுமையான அத்துமீறல்.

10. சர்வதேசத் தொழிலாள அமைப்பின் ஆய்வறிக்கைபடி, இந்தியாவில் நடக்கும் கடத்தல் தொழிலில், 10% மட்டுமே சர்வதேச அளவில் நிகழ்கிறது; மீதமுள்ள 90% மாநிலங்களுக்கு இடையில் நிகழ்கிறது.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

திங்கள் 30 ஜூலை 2018