மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

பிரதமர் மீது ரசாயனத் தாக்குதல் மிரட்டல்!

பிரதமர் மீது ரசாயனத் தாக்குதல் மிரட்டல்!

டெல்லியிலுள்ள என்.எஸ்.ஜி கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, பிரதமர் மீது ரசாயனத் தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியிலுள்ள தேசிய பாதுகாப்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 27ஆம் தேதி தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய மர்ம நபர், பிரதமர் மீது ரசாயனத் தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணை டிராக் செய்ததில் அது மும்பை பகுதியை காட்டியதையடுத்து, இதுதொடர்பாக மும்பை காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மிரட்டல் விடுத்தவரை காவல் துறையினர் தேடிய போது அவர் ஜார்க்கண்டைச் சேர்ந்தவர் என்பதும், அங்குள்ள வாகேஷ்வர் குடிசைப் பகுதியில் வசிப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மிரட்டல் விடுத்ததாக காசிநாத் மண்டல் என்பவரை மும்பை டிபி மார்க் காவல் துறையினர் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பை மத்திய ரயில் நிலையத்திலிருந்து சூரத் ரயிலில் செல்வதற்காக காத்திருந்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 505 (1), 505 (2) வதந்தி பரப்புதல், 182 தவறான தகவல் அளித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 22வயதாகும் காசிநாத் மண்டல் பாதுகாப்பு ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரின் நண்பர் சமீபத்தில் நடந்த நக்சல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், இதுதொடர்பாக அவர் பிரதமரை சந்திக்க விரும்பியதாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

திங்கள் 30 ஜூலை 2018