மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஜூலை 2018

அசாம்: என்.ஆர்.சி. முழு வரைவு பட்டியல் வெளியீடு!

அசாம்: என்.ஆர்.சி. முழு வரைவு பட்டியல் வெளியீடு!

அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி வருகின்றனர். இதனால் யார் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், யார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அசாம் மக்களோடு மக்களாக அவர்கள் கலந்து வசித்து வருவதால் அதிகாரிகளுக்கு அவர்களை இனம் பிரிப்பதில் சிக்கல் உள்ளது.

எனவே, இதனைத் தடுப்பதற்காக அசாம் மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவேட்டை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இந்தப் பணி கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கியது. தங்களின் பெயரை பதிவு செய்ய 3.29 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர்.என்.ஆர்.சி.யின் முதல் வரைவு பதிவேடு ஜனவரி 1ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், என்.ஆர்.சி. முழு வரைவு பதிவேடு இன்று (ஜூலை 30) வெளியிடப்பட்டது. இதில், 40 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டுள்ளது. 2.89 கோடி மக்களின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

மத ரீதியாகவும் இன ரீதியாகவும் சிறுபான்மையினராக உள்ள பலரையும் இந்தப் பட்டியலில் மத்திய அரசு சேர்க்கவில்லை என்று திருணமூல் காங்கிரஸ் கட்சியின் எஸ்.எஸ். ராய் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேபோல் 40 லட்சம் மக்களின் பெயர் இடம்பெறவில்லை என்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது என்று அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா கூறியுள்ளார்.

எனினும் இது வரைவு வாக்காளர் பட்டியல் மட்டுமே நியாயமான நபர்களின் பெயர்கள் விடுபட்டு இருந்தால், அவர்கள் பெயர் மீண்டும் சேர்க்கப்படும் என அசாம் மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதேபோல், “ இறுதிப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தை அணுகலாம். யாருக்கும் எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது, எனவே யாரும் பீதியடைய தேவையில்லை” என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

திங்கள் 30 ஜூலை 2018