மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

ஐநாவில் கடும் நிதி நெருக்கடி!

ஐநாவில் கடும் நிதி நெருக்கடி!

ஐநாவில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க உறுப்பு நாடுகள் தர வேணடிய பங்களிப்புகளை உடனடியாக செலுத்தக் கோரி அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் அந்தோனியோ கிட்டராஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனைத்து உறுப்பு நாடுகளுக்கு எழுதிய கடிதத்தில் ஐநா சபை கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் உறுப்பினர் நாடுகள் தங்களது பங்களிப்புகளை மிகத் தாமதமாக செலுத்தியதுதான். இது போன்ற நிதிப் பற்றாக்குறை முன்னதாக வந்ததில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே நிதி வரவு மிகவும் மந்தமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

ஜீலை26வரை,இந்தியா உள்ளிட்ட 112 உறுப்பினர் நாடுகள் வழக்கமாக அளிக்க வேண்டிய பங்களிப்புகளைச் செலுத்தி விட்டன. இதில் இந்தியா கடந்த ஜனவரி 29ம்தேதியன்று 17.91 மில்லியன் டாலர்களை பங்களிப்பாக செலுத்தியுள்ளது. 2018ற்கான நிதியாக மற்ற உறுப்பு நாடுகள் 1.49 பில்லியன் டாலர்களை செலுத்தியுள்ளன. ஆண்டு தோறும் ஐநாவின் உறுப்பினர் நாடுகள் செலுத்தும் பங்களிப்பு 1.70 பில்லியன் டாலர்களாகும். இன்னும் 81 நாடுகள் இன்னும் தங்களுக்கான நிதியை செலுத்தவில்லை. இவற்றில் அமெரிக்கா,ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ்,பிரேசில்,எகிப்து,இஸ்ரேல்,மாலத்தீவுகள்,பாகிஸ்தான்,சவுதி அரேபியா,சூடான்,சிரியா மற்றும் ஜிம்பாவே ஆகிய நாடுகள் அடக்கம். இதில்,அமெரிக்காதான் அதிகமான பங்களிப்பாக 22 விழுக்காடு அதாவது 5.4பில்லியன் டாலர்களை செலுத்தி வருகிறது. ஐநாவின் அமைதிப்படைக்கு செலவாகும் மொத்த தொகையான 7.9 பில்லியனில் 28.5விழுக்காட்டையும் செலுத்தி வருகிறது.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

சனி 28 ஜூலை 2018