மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

மதவாதமல்ல, வளர்ச்சியே எங்கள் அஜெண்டா: அமித் ஷா

மதவாதமல்ல, வளர்ச்சியே எங்கள் அஜெண்டா: அமித் ஷா

பாஜக வரும் நாடாளுமன்றத் தேர்தலைத் தனது வளர்ச்சி சாதனைகளின் அடிப்படையில்தான் சந்திக்குமே அன்றி, மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்துவது தங்கள் திட்டம் அல்ல என்று பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அமித் ஷா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாளை (ஜூலை 29) இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவர இருக்கும் அமித் ஷாவின் முழு பேட்டியின் சுருக்கத்தை இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய தளம் இன்று வெளியிட்டுள்ளது.

அதில், ”மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் அடைவது என்பது பாஜகவின் அஜெண்டாவிலேயே இல்லை. அரசியலை மதமயமாக்கும் முயற்சியை நாங்கள் செய்யமாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார் அமித் ஷா.

மேலும், “பாஜக ஆதரவாளர்கள் மட்டுமே 11 கோடி பேர் இருக்கிறார்கள். உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்தால் இன்னும் அதிகமாகும். மத்திய பாஜக அரசின் நலத்திட்டங்கள் 19 மாநிலங்களில் இருக்கும் 22 கோடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றியிருக்கிறது. மத்திய அரசு சார்பில் ஏழரை கோடி வீடுகளில் கழிப்பறைகளை கட்டியிருக்கிறோம். 19 ஆயிரம் கிராமங்கள் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளன. முத்ரா கடன் திட்டத்தால் 12 கோடி தனி நபர்கள் பலன் அடைந்துள்ளார்கள், 18 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, 19 கோடி மக்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். இத்தனை சாதனைகளை மக்களிடம் சொல்லி இந்த வளர்ச்சியை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிறுத்துவோமே தவிர வேறு எதுவும் எங்கள் திட்டமில்லை’’ என்று பட்டியலிட்டுச் சொல்லியிருக்கிறார் அமித் ஷா.

ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் பொதுப் பிரச்னைகளை மத ரீதியாக அணுகுவதாக பாஜக மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா,

“நான் அப்படி நினைக்கவில்லை. இதுவரை நடந்த வரலாற்றுப் பிழைகளை நாங்கள் திருத்த முயல்கிறோம். அதுதான் ஜம்மு காஷ்மீரிலும் நடந்திருக்கிறது. ஒவ்வொரு நல்ல அரசின் கடமை என்னவென்றால், தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியை வளர்ச்சி அடைய வைப்பதே. ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் நிறைய நடந்து வருகின்றன. அங்கே இதுவரை கடந்த ஆட்சிகளால் நடத்தப்பட்ட தவறான அரசியலை திருத்தவே நாங்கள் முயற்சிக்கிறோம்’’ என்று கூறியுள்ளார் அமித் ஷா.

பாஜகவை எதிர்த்து மகா கட்பந்தன் எனப்படும் மெகா கூட்டணி பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில்,

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

சனி 28 ஜூலை 2018