மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

விமர்சனங்களுக்குப் பதில் அளித்த ஸ்ரீரெட்டி

விமர்சனங்களுக்குப் பதில் அளித்த ஸ்ரீரெட்டி

ஸ்ரீரெட்டி விவகாரம் டோலிவுட்டில் சற்றே ஓய்ந்துவிட்ட நிலையில் தற்போது கோலிவுட்டில் மையம் கொண்டுள்ள ஸ்ரீரெட்டி குறித்து இங்குள்ள பிரபலங்கள் வாய் திறக்கத் தொடங்கியுள்ளனர். நடிகை த்ரிஷா முன்னதாக, "ஸ்ரீ ரெட்டிக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு அவரை பிரபலமாக்க தேவையில்லை" என்றிருந்தார். பிரபல சின்னத்திரை நடிகை சோனியா, "ஸ்ரீரெட்டி ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்புவதெல்லாம் நம்பக்கூடியதாக இல்லை" என்றார். நடிகர் கார்த்தி, "ஸ்ரீரெட்டி தனது புகார்களை ஆதாரத்துடன் காவல் துறையில் அளிக்க வேண்டுமே தவிர இப்படி ஊடகங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளியிட்டுப் பரபரப்பு கிளப்புவது தேவையற்ற வேலை" என்று கருத்துக் கூறியிருந்தார்.

இவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ஸ்ரீரெட்டியும் சளைக்காமல், “நடிகர் சங்கம் என்ற ஒரு அமைப்பு இருக்கும்போது அங்கே அழைத்து விசாரிக்காமல் காவல் துறையை நாடச் சொன்னால் பிறகு நடிகர் சங்கம் என்ற அமைப்பு எதற்கு?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து நடிகை ஸ்ரீரெட்டிக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இயக்குநர் வாராகி புகார் கொடுத்தார். இந்தப் புகாரில், “நடிக்க வாய்ப்பு கேட்டு ஸ்ரீரெட்டி ஏமாற்றப்படவில்லை என்றும், அவர் விபச்சாரம் செய்துள்ளார்” என்றும் கூறியிருந்தார்.

நேற்று (ஜூலை 27) தம்மை விலைமாது எனக் கூறிய வாராகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஸ்ரீரெட்டி புகாரளித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வீண் விளம்பரத்திற்காக வாராகி தம்மை ஊடகங்களில் தவறாகப் பேசியதாகவும், தம்மை மிரட்டும் வகையில் பேசிய அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

சனி 28 ஜூலை 2018