மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

என்னைப் பற்றி எனக்குத் தெரியும் !

என்னைப் பற்றி எனக்குத் தெரியும் !

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சேட்டேஸ்வர் புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்கள் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் போட்டியில் யாரைக் களமிறக்குவது என்னும் விஷயத்தில் இந்திய அணி தடுமாறிவருகிறது. துவக்க வீரர்களாக ஷிகர் தவானும் முரளி விஜய்யும் வழக்கமான அவர்களது இடத்தில் இறங்க அதிக வாய்ப்புள்ளது என்னும் நிலையில், மூன்றாவது இடமே தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

ராகுல் திராவிடின் ஓய்வுக்குப் பின்னர் அந்த இடத்தில் களமிறங்கி வருபவர் புஜாரா. ஆனால் தற்போது கே.எல்.ராகுல் அணியில் இடம்பிடித்திருப்பதால் அவரை எந்த வரிசையில் களமிறக்குவது, என யோசித்துவருகிறது தேர்வுக் குழு. இதனால் தற்போது பெரிதாக ஃபார்மில் இல்லாத புஜாராவுக்குப் பதிலாக கே.எல்.ராகுலே புஜாரா இடத்தைக் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது எனவும் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்தும் தனது ஃபார்ம் குறித்தும் இ.எஸ்.பி.என் நிறுவனத்தின் தி கிரிக்கெட் மந்த்லி என்னும் பத்திரிகையில் புஜாரா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதில்,“நான் எல்லாவித போட்டிகளிலும் விளையாடவே ஆசைப்படுகிறேன். டெஸ்ட் போட்டியில் நான் விளையாடும்போது, டெஸ்ட் அல்லாத போட்டிகளில் சிறப்பாக விளையாடி டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கும் வீரர்களின் ஃபார்ம் குறித்து நான் அதிகம் கவலைப்படுவதில்லை. காரணம், டெஸ்ட்டுக்கும் மற்ற போட்டிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மற்ற போட்டிகளில் ரன்கள் குவிக்கும் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளிலும் ரன் குவிப்பார்கள் என சொல்ல முடியாது.

அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் களமிறங்கும்போது மற்றவர்களின் ஃபார்ம் குறித்து, கவலைப்படுவதெல்லாம் இல்லை. என் விளையாட்டு மற்றும் என் ஃபார்ம் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். இந்திய அணிக்காக விளையாடியபோதும் மற்ற போட்டிகளில் விளையாடியபோதும் பலமுறை திறமையை நிரூபித்துள்ளேன். என் சக வீரர்களும் அணி நிர்வாகமும் என்னைப் பற்றி நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள்” என்றார்.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

சனி 28 ஜூலை 2018