மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

பொருட்களின் விலையைக் குறைத்த சாம்சங்!

பொருட்களின் விலையைக் குறைத்த சாம்சங்!

ஜிஎஸ்டி கவுன்சில் மின்னணுப் பொருட்களுக்கான வரியைக் குறைத்துள்ளதால் சாம்சங் நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கான விலையைக் குறைத்துள்ளது.

ஜூலை 21ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மின்னணு பொருட்கள் உட்பட 15 பொருட்களின் வரி 28 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. வரிக் குறைப்பின் பயனை மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பொருட்களின் விலையைக் குறைப்பது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து சானிட்டரி நாப்கின்கள் விலையை உற்பத்தி நிறுவனங்கள் 2.5 விழுக்காடு வரை குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்திய மின்னணு பொருட்கள் சந்தையில் பெரும்பங்கைத் தன்வசம் வைத்துள்ள சாம்சங் நிறுவனம் பொருட்களின் விலையைக் குறைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சாம்சங் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான ராஜீவ் புடானி இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “வரிக் குறைப்பின் முழுப் பயனை அனுபவித்து மகிழுங்கள். ஜிஎஸ்டியில் 7.8 விழுக்காடு வரியை எல்லாப் பயனாளிகளுக்கும் குறைக்கவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

சனி 28 ஜூலை 2018