மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 மே 2018

ஜெ. நினைவிட வழக்கு ஒத்திவைப்பு

ஜெ. நினைவிட  வழக்கு ஒத்திவைப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்குக் கடற்கரையில் நினைவிடம் அமைக்கத் தடை கோரி டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

“அரசு செலவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கக் கூடாது என நான் உட்படப் பலர் வழக்கு தொடர்ந்துள்ளோம். கடலோர ஒழுங்கு முறைச் சட்டத்துக்கு எதிராக, அவரின் உடல் கடற்கரைக்கு மிக அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் என் தரப்பில் வக்கீல் ஆஜராகவில்லை என வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கை மீண்டும் ஏற்று விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது” என்று. டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது, 50 கோடி செலவில் அரசு நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் ராமசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

அடிக்கல் நாட்டப்பட்ட அன்றைய தினத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள சாலைகளில் விதிகளுக்குப் புறம்பாக விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டு இருந்ததாகத் தெரிவித்துள்ள அவர், விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டதைக் கண்டித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய தன்னை திருவல்லிக்கேணி உதவி கமிஷ்னர் உதவியுடன் சிலர் கத்தி, தண்ணீர் பாட்டில் மற்றும் துடைப்பம் கொண்டு தாக்கியதாகவும் கூறியுள்ளார். எனவே விதிகளுக்குப் புறம்பாக விளம்பரப் பலகைகள் வைத்தவர்கள் மற்றும் தன்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் ராமசாமி தன் மனுவில் கோரியுள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

புதன் 16 மே 2018