மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 மா 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

அந்த கனடா பிரதமர் இந்தியாவுக்குள்ள காலடி எடுத்து வைச்சதிலேர்ந்து, அவரை வரவேற்க யாரும் போகல. ஏ... மோடி அரசே... ஏ... ஏகாதிபத்தியமே... தமிழனா இருந்தா நேரில் சென்று பாரு, இந்தியனா இருந்தா... ப்பா முடியல... இன்னமும் போயிட்டு இருக்கு... அவற்றில் சிலவற்றை பார்ப்போமா? சிரியா போர் அவலங்களை பார்த்து பார்த்து நொந்து போயிருந்தவர்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் அவர்களின் பெருந்தன்மை சற்றே ஆறுதல் தருகிறது. அகதிகளாக வரும் மக்களை நேச கரத்துடன் அரவணைக்க கனடா முன்வந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் 500க்கும் அதிகமானவர்கள் அந்த நாட்டில் குடியேறி இருக்கிறார்கள். இவர்களுக்காக எளிதாக விசா, குடியுரிமை பெற வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

‘இது எங்கள் நாடு மட்டும் இல்லை. இனி உங்கள் நாடும். இனி நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்’ என்ற ஜஸ்டின் அவர்களின் பேச்சு அவரின் மனிதாபிமானத்தைப் பறை சாற்றுகிறது.

இப்படி ஓர் உலக தலைவர் இருப்பது கண்டு வியந்து போனேன். அவரின் எளிமை இந்தியா வந்திருந்தபோது பார்த்தோம். வாழ்க இவர்தம் புகழ், நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.

இதற்கடுத்ததா...

நம்ம ‘தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்’ ஆளு இருக்கான்ல... அவனோட எழுத்து திறமையைப் பார்ப்போமா.

தட் மொமண்ட்... இதுக்கே ஆச்சர்யப்பட்டா எப்படி, இதைவிட ஸ்பெஷல் ஐட்டம் ஒண்ணு இருக்கு மொமண்ட்.

சிரியாவுக்கு சென்று அகதிகளை ஏற்றி வர விமானப்படை விமானத்தை அனுப்ப கனடா பிரதமர் முடிவு செய்தார். முதற் கட்டமாக 150 பேரை ஏற்றிவரும் கொள்ளளவுள்ள விமானம் தயாரானது. ஆனாலும் எந்த விமானியும் யுத்த பூமியாக இருக்கும் சிரியா செல்ல விரும்பவில்லை. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, பாகிஸ்தான் என அனைத்து நாட்டு விமானிகளும் பயத்தில் மறுக்க ஓர் ஈழத்து தமிழ் விமானி அதற்கு ஒப்புக் கொண்டார். ஆம் அவர் பெயர் கிரிஸ், Sriwijaya Krish யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் பிறந்தவர்.

தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் கிரிஸ் என்கிற கிரிஸ்னா என்னும் அந்த விமானி ஃப்ளை எமிரேட்ஸ் விமானத்தை ஓட்டி சென்று கனடாவில் நின்றிருந்தார். அங்கு நிலைமையை அறிந்த கிரிஸ் தாமாக இந்த மீட்புப் பணிக்குச் செல்ல முன்வந்தார். வீரத் தமிழன் ஆயிற்றே!

அடுத்த அரைமணி நேரத்தில் சிரியா புறப்பட்ட ஏர் கனடா விமானம்... 150 பயணிகளை விட மேலதிகமாக 13 பயணிகளை ஏற்றி ஏவுகணைகளுக்கும் டிமிக்கி விட்டு கனடா திரும்பியது. மேலதிக பெட்ரோலைத் திறந்து அந்த எடைக்கு நிகராக மேலும் 13 பேரை ஏற்றி வந்த தமிழனின் புத்திசாலித்தனத்தை கனேடிய பிரதமர் மெச்சினார்.

மேலும் ஏர் டைட்டானியா எனும் விமானம் மூலம் இன்னும் 25,000 பேர் வரை அழைத்து வர, விமானத்தையும் செலுத்தும் பணியையும் கிரிஸ் இடமே ஒப்படைத்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் அந்த விமானம் சிரியா புறப்படவுள்ளது. அந்த அன்பு பிரதமருக்கும், வீரத் தமிழனுக்கும் உண்மை தமிழன் என்றால் வாழ்த்தலாமே!

இதற்கு அடுத்ததாக,

சிரியாவுக்குள் புகுந்த ஈழத்து புலிகள்! #தமிழன் டா! அப்படின்னு ஹாஷ்டேக் உருவாக்கி பக்கம் பக்கமா எழுதுறாங்க. சரி நீ தமிழன் தான் எத்தனை குழந்தைகளை நீ தத்தெடுத்த? அப்படின்னு கேட்டா, நம்மள ப்ளாக் பண்ணிடறாங்க. பதிலே காணும்.

அடுத்து இன்னொரு குரூப்,

சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த கனடா பிரதமர் பிறந்த நாள். வாழ்த்துகள் சொல்லுவீங்களா அண்ணா அக்கா? - அடேய்... முடியலடா...

(அப்படியே அவருடைய திருமண நாள், குழந்தை குட்டி பிறந்த நாள் எல்லாத்தையும் கேட்டு வெச்சுக்கோங்க ஃப்ரெண்ட்ச்... பின்னாடி உதவும். முதலில் வாழ்த்து சொன்னது ஒரு தமிழன் தான்னு சொல்லலாம்ல்ல)

இதுல, அடுத்த லெவலுக்குப் போயி, அவரோட பூர்வீகம், தாத்தா பாட்டியெல்லாம் எங்க சமூகம்தான் அப்படின்னு மூணு நாலு பேரு, வரலாற்று கற்பனைக் கதைகளை அள்ளிவிட்டுக்கிட்டு இருக்காங்க. அடேய்களா... அவரு ஏண்டா இந்தியாவுக்கு வந்தோம்ன்னு நெனக்கிற வரைக்கும் விடமாட்டீங்க போல... பாவம்யா... போதும் நிறுத்திக்கோங்க. நீங்கள்லாம் பாராட்டுறீங்களா, கலாய்க்கறீங்களா ஒண்ணுமே புரியலையே...

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

செவ்வாய் 6 மா 2018