மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

தமிழகத்தை உலுக்கிய ஆணவக் கொலை: டிசம்பரில் தீர்ப்பு!

தமிழகத்தை உலுக்கிய ஆணவக் கொலை: டிசம்பரில் தீர்ப்பு!

தமிழகத்தையே உலுக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கில் டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று திருப்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர் (22). இவரும் பழநியைச் சேர்ந்த கௌசல்யாவும் கல்லூரியில் பயிலும்போது காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வேறு வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். இந்தத் திருமணத்தை விரும்பாத கௌசல்யாவின் பெற்றோர் இவர்களைக் கடுமையாக எதிர்த்தார்கள்.

இதையடுத்து, 2016ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று உடுமலையில் கூலிப்படை மூலம் சங்கர் வெட்டிக் கொல்லப்பட்டார். படுகாயத்துடன் உயிர் தப்பிய கௌசல்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது சங்கரின் வீட்டிலேயே தங்கி அவர்களது குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருந்துவருகிறார்.

சங்கர் படுகொலை குறித்து போக்குவரத்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளான கௌசல்யாவின் பெற்றோர், தாய்மாமன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 11 பேரைக் காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி, கூட்டுச்சதி, வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இன்று (நவம்பர் 14) நடைபெற்ற விசாரணையின்போது சிறப்பு நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் 1500க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது படுகொலையில் சம்பந்தப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கௌசல்யாவும் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி டிசம்பர் 12ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆண்டுக்கு 1000 பேர் சாதி ஆணவத்திற்குப் பலியாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சாதி மறுப்புத் திருமணம் செய்ததால் 81 படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சங்கர் ஆணவக் கொலையின் தீர்ப்பு சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(கௌசல்யாவின் விரிவான பேட்டி மின்னம்பலம்.காமில் அண்மையில் வெளியானது.அதற்கான இணைப்பு: )

முட்களின் மேல் சில பூக்கள்: கெளசி சங்கர் பகுதி 1

முட்களின் மேல் சில பூக்கள்: கெளசி சங்கர் பகுதி 2

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

செவ்வாய் 14 நவ 2017