மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

முட்டை: வரலாறு காணாத விலையுயர்வு!

முட்டை: வரலாறு காணாத விலையுயர்வு!

நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளிலிருந்து நாள்தோறும் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மொத்த உற்பத்தியில் இங்கிருந்து 4 சதவிகித முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், 2 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. அதேபோல, தமிழகத்தில் குளிரும், மழையும் மாறி மாறி வருவதால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலிருந்து வடமாநிலங்களுக்கு நாள்தோறும் 3 லட்சம் முட்டைகள் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக முட்டைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. நாமக்கலில் முட்டையின் கொள்முதல் விலை நவம்பர் 12ஆம் தேதி வரை ரூ.4.59 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்றைய (நவம்பர் 13) கொள்முதல் விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.4.74 ஆக உள்ளது. கொள்முதல் விலை இந்த அளவுக்கு உயர்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். சில்லறை விற்பனைக் கடைகளில் முட்டை விலை 6 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

செவ்வாய் 14 நவ 2017