மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

கங்குலியின் சாதனையை முறியடிப்பாரா கோலி?

கங்குலியின் சாதனையை முறியடிப்பாரா கோலி?

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள், டி-20 தொடர்களை விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரில் இலங்கை அணியை 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெறும் பட்சத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு அது 22ஆவது வெற்றியாகும். அப்படிச் செய்தால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனை முறியடிக்கப்படும்.

2014ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டனாகப் பொறுப்பேற்ற கோலி சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். இதுவரை 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி 19 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அதிக வெற்றிகளைப் பெற்றுதந்த கேப்டன்கள் வரிசையில் 3ஆவது இடத்தில் அவர் உள்ளார். 27 டெஸ்ட் வெற்றிகளுடன் முதலிடத்தில் தோனி உள்ளார். முன்னாள் கேப்டன் கங்குலி 21 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். தற்போது 19 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள கோலி இந்த தொடரை 3-0 என்ற புள்ளிகளுடன் கைப்பற்றினால், 22 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிவிடுவார்.

ஆனால், மூன்றாவது டெஸ்டில் கோலி விளையாட மாட்டார் என்னும் செய்தி வந்துள்ள நிலையில் இந்தத் தொடரில் அவரால் கங்குலியின் சாதனையைச் சமன்செய்யத்தான் முடியும் என்று தோன்றுகிறது.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

செவ்வாய் 14 நவ 2017