மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

நாடாளுமன்ற முற்றுகை: விவசாயிகளின் ரயில் டிக்கெட் ரத்து?

நாடாளுமன்ற முற்றுகை: விவசாயிகளின் ரயில் டிக்கெட் ரத்து?

இதுவரை இரண்டு கட்டங்களாக டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்திய தமிழக விவசாயிகள்... அடுத்து நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடரின்போது முற்றுகையிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

விவசாயிகள் கடன்களை ரத்துசெய்யவேண்டும், விவசாய பயிர்களுக்கு லாபகரமான விலை கொடுக்கவேண்டும், தேசிய நதிகளை இணைக்கவேண்டும் என்று கோரிக்கைகளை முன்னிறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு டெல்லியில் தொடர்ந்து போராடினார்.

டெல்லியில் தொடர்ந்து 100 நாட்கள் நூறுவிதமான போராட்டங்கள் செய்தும், மோடி அரசு கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், ’’நாட்டு மக்களுக்கு உணவுக் கொடுக்கும், விவசாயிகளை வாழவைக்க , அந்நிய நாடுகளைப் பார்த்து இந்திய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டும். இந்திய விவசாயிகளை, ஆட்சியாளர்கள் அநியாயமாக கொன்று குவித்துவருகிறார்கள், பாசனம் இல்லாமலும், விவசாயம் செய்யமுடியாமலும், செய்த விவசாயத்தை அறுவடை செய்யமுடியாமல், கடன் சுமையால் தற்கொலை செய்துவருகிறார்கள் விவசாயிகள்.

விவசாயக் கடன்களை ரத்துசெய்யவேண்டும், எம்.எஸ்.சாமிநாதன் குழு, பரிந்துரை செய்ததை அமல்படுத்தவேண்டும் என்ற முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி... நவம்பர் 20 ம் தேதி அகில இந்திய விவசாயிகளோடு சேர்ந்து , டெல்லியில் ராமலீலா மைதானத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு, ஆயுத்தமாகிவருகிறோம்’’ என நம்மிடம் தெரிவித்தார் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன்.

இந்தப் போராட்டத்தில் 29 மாநிலங்களில் இருந்து, 180 விவசாய சங்கங்கள் கலந்துகொள்கின்றன, நவம்பர் 20ந் தேதி, ராமா லீலா மைதானத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதன்பின் நாடாளுமன்றத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.

இதற்காக வரும் 18 ஆம் தேதி தமிழகத்திலிருந்து சுமார் 1000 விவசாயிகள் டெல்லிக்குச் செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.

நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் செய்யப்போவதை அறிந்த மத்திய மாநில உளவு பிரிவினர்.. விவசாயிகள் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை கன்ஃபார்ம் செய்ய வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் அனுப்பியுள்ளார்களாம்

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

செவ்வாய் 14 நவ 2017