மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

சில்லறைப் பணவீக்கம் 3.58% உயர்வு!

சில்லறைப் பணவீக்கம் 3.58% உயர்வு!

எரிபொருள், உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் 3.58 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

2016ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் நுகர்வோர் விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் 4.2 சதவிகிதமாக இருந்தது. அதேபோல, 2017ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 3.28 சதவிகிதமாக இருந்தது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் அது 3.58 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது உணவுப் பொருட்கள் பணவீக்கம் 1.25 சதவிகிதத்திலிருந்து 1.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாகக் காய்கறிகளுக்கான பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 3.92 சதவிகிதத்திலிருந்து அக்டோபர் மாதத்தில் 7.47 சதவிகிதமாக இரட்டிப்பு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எரிபொருள் பணவீக்கம் 5.56 சதவிகிதத்திலிருந்து 6.36 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியானது இந்தியாவின் சில்லறைப் பணவீக்க விகிதத்தை 4 சதவிகிதத்திலேயே வைத்திருக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் 2 சதவிகிதம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்க அனுமதிக்கப்படுகிறது. முன்னதாக ஜூன் மாதத்தில் பணவீக்க விகிதம் இலக்கை விட மிகவும் குறைந்து 1.46 சதவிகிதமாக இருந்தது. அடுத்த மாதம் நடக்கவிருக்கும் கொள்கை மறு சீராய்வுக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

செவ்வாய் 14 நவ 2017