மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

தம் குழந்தைகளை எந்தக் கஷ்டமும் தெரியாமல் வளர்க்க வேண்டுமென்பதே தற்கால பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. வேண்டியதெல்லாம், ஆசைப்படுவதையெல்லாம் வாங்கிக்கொடுத்து பழக்குவதும் ஒரு நிலை. இப்போதே குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் பெருத்த வயிற்றுடன் பள்ளிக்குச் செல்கிறார்கள்.

ஊட்டச்சத்து குறைபாட்டை ஆரம்பத்திலிருந்தே சரி செய்ய சில வழிமுறைகளை நீங்களும் தெரிந்துகொண்டு, சகதோழிகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.

1. சிறு குழந்தை நன்றாக வளர வேண்டும் மற்றும் வேகமாக உடல் எடை அதிகரிக்க வேண்டும். பிறந்ததிலிருந்து இரண்டு வயது வரை, குழந்தைகளின் எடையை ஒவ்வொரு மாதமும் கவனிக்க வேண்டும். இரண்டு மாதத்துக்கு குழந்தையின் எடை அதிகரிக்கவில்லை என்றால் ஏதோ தவறு என்று அர்த்தம்.

2. ஆறு மாதங்கள் வரை சிசுவுக்குத் தேவையான உணவும் பானமும் தாய்ப்பால் மட்டுமே. ஆறு மாதங்களுக்குப் பின் தாய்ப்பாலுடன் குழந்தைக்கு மற்ற வித விதமான உணவுகளும் தேவை.

3. ஆறு மாதங்கள் முதல் இரண்டு வயது வரை, குழந்தைகளுக்கு ஒரு நாளில் தாய்ப்பாலுடன் ஐந்து முறை உணவும் அளிக்க வேண்டும்.

4. நோயை எதிர்க்க மற்றும் பார்வை பாதிப்பு வராமல் தவிர்க்க குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ தேவை. அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகள், எண்ணெய், முட்டை, பால் சார்ந்த பண்டங்கள், மெருகேற்றிய உணவுகள், தாய்ப்பாலில் வைட்டமின் ஏ உள்ளது.

5. உடல் மற்றும் புத்தி திறனை பாதுகாக்க, குழந்தைகளுக்கு இரும்பு சத்து நிறைந்த உணவுகள் தேவை. ஈரல், கொழுப்பில்லா மாமிசம், மீன், முட்டை மற்றும் இரும்பு சத்து மெருகேற்றிய உணவுகள் அல்லது இரும்பு மாத்திரைகள் போன்றவை இரும்புச்சத்தை வழங்கும்.

6. கற்றுகொள்ளும் குறைபாட்டை மற்றும் மேம்பாட்டு தாமதத்தைத் தவிர்க்கவும், அயோடைட் உப்பு அவசியம்.

7. உடல்நலம் சரியில்லாதபோது, குழந்தைகள் தொடர்ந்து சரியாக சாப்பிட வேண்டும். சரியான பின்பு, குழந்தைகள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒருவேளை அதிகமான உணவை ஒரு வாரத்துக்காவது சாப்பிட வேண்டும்.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

செவ்வாய் 14 நவ 2017