மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

கிச்சன் கீர்த்தனா - தோசை உப்புமா

கிச்சன் கீர்த்தனா - தோசை உப்புமா

நம்மைப்போன்ற அழகான குழந்தைகளுக்கு... (குழந்தைன்னா உடனே என்ன சிரிப்பு முகத்தில்...) தோசை என்றால் மிகவும் பிடிக்கும். அதே சமயம் தோசை மட்டுமே என்றால் அலுப்புத் தட்டும். அதேபோல்தான் உப்புமாவும். சரி, கொஞ்சம் வித்தியாசமாக தோசை உப்புமா செய்வோமா...

தேவையானவை:

தோசை மாவு - ஒரு கப், பால் - 2 குழிக்கரண்டி, சீனி - 4 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, கடுகு – உளுந்து - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, பச்சை மிளகாய் - 1

செய்முறை:

தோசை மாவை வார்க்கவும். ஆறியதும் ப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.

பின்னர், அதில் சிறிது சிறிதாக பால்விட்டு உதிரியாக வரும் அளவுக்கு பிசையவும்.

கடாயில் எண்ணெய் அல்லது நெய்விட்டு கடுகு - உளுந்து போட்டு தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்னர் சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியதையும் உப்பையும் சேர்த்து பொன்னிறமாக சுருளும் வரை வதக்கவும்.

அடுப்பை அணைத்துவிட்டு தாளிப்பை உதிர்த்து வைத்துள்ள தோசையோடு சேர்த்து கலக்கவும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்துவிடும். உங்களையும் சேர்த்துதான்.

கீர்த்தனா சிந்தனைகள்:

உருவத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாதென அனுபவபூர்வமாக உணர்ந்த நாள் இன்று!பெரிய வெங்காயம் கிலோ 50 ரூபாய்!

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

செவ்வாய் 14 நவ 2017