மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 நவ 2017

திருட்டுப் போகாமல் இருக்க... இறுக்க ஜீன்ஸ்!

திருட்டுப் போகாமல் இருக்க... இறுக்க ஜீன்ஸ்!

திருட்டு, வழிப்பறி போன்றவை எல்லா இடங்களிலும் நடைபெறுகிறது. அதாவது வளர்ந்துவரும் நம் நாட்டில் மட்டும் அல்ல, வளர்ந்துவிட்ட நாடுகளிலும் நடைபெறுகிறது. ஆமாம்... அங்கும் மனிதர்கள்தானே வாழ்கிறார்கள்?

திருடர்கள் பத்தி நாம பொதுவா சொல்லுறது, எப்படி இப்படியெல்லாம் திருடுறாங்கனு! ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ? இப்படி புதுசு புதுசா திருடுறாங்கனு தான். ஆனா அமெரிக்காவில் நம்ம கிட்ட இருந்து திருடன் எதையும் திருடக்கூடாது என்பதற்காக ஒரு டெக்னிக்கை யூஸ் பண்றாங்க. அது என்ன டெக்னிக்குனா... டைட்டா ஜீன்ஸ் போட்டா திருடங்க நம்மகிட்ட திருட மாட்டாங்கன்னு எல்லாரும் டைட்டா ஜீன்ஸ் போட்டுக்கிட்டுத் திரியறாங்கப்பா. டைட்டா ஜீன்ஸ் போடுற டெக்னிக்கைக் கண்டுபிடிச்சாங்கனா... வாங்க ஃப்ளாஸ் பேக்குக்குப் போலாம்.

நியூயார்க் நகரில் பாதாள ரெயில் நிலையம் ஒன்றுள்ளது. இந்த ரயில் நிலையத்தைக் கடந்தவாறு ஜெர்மன் சென்ட் என்ற கட்டடக் கலை வல்லுநர் ஒருவர் இரவு நேரத்தில் சென்றுகொண்டிருந்தார். அவர் இரவு நேரத்தில் தனிமையில் செல்வதை பார்த்த மூன்று குண்டர்கள் அவரை பின்தொடர்ந்து சென்றார்கள்.

‘ஓடுமீன் ஓட உறுமீன் வரை காத்திருக்குமாம் கொக்கு’... அதுபோல சரியான நேரம் வரும்வரை காத்திருந்த வழிப்பறிக்காரர்கள், திடீரென அவரை வழிமறித்துத் தாக்கினார்கள். ஆனால், அவரிடமிருந்து எதையும் பறிக்க முடியவில்லை. ஏன்றென்றால் அவரிடம் எதும் இல்லை என்பதாக அர்த்தம் இல்லை. அவர் இறுக்கமான பேண்ட் அணிந்து இருந்ததால், அதன் பாக்கெட்டுக்குள் அவர்களால் கைவிட்டு திருட முடியவில்லையாம். இவ்வளவு கஷ்டப்பட்டது வீணாப்போச்சேனு, அவரை அடிச்சது தான் மிச்சம்னு குண்டர்கள் அங்கிருந்து ஓடிப் போயிட்டாங்களாம்.

இந்த திகில் கலந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி பத்திரிகை ஒன்றுக்கு ஜெர்மன் சென்ட் அளித்த பேட்டியில், “என்னுடைய பேண்ட் பாக்கெட்டில் நான் புதியதாக வாங்கிய ஐபோன் 6 இருந்தது. திருடர்களால் ஒரு விரலைக்கூட என்னுடைய பாக்கெட்டில் விட முடியவில்லை. அவ்வளவு இறுக்கமாக இருந்தது. அதனால் விலை உயர்ந்த என் ஐபோன் தப்பியது”என்று கூறியுள்ளார்.

இந்தச் செய்தியைப் படித்த பின்னர் நியூயார்க்கில் பலரும் தனியாக சென்றால், அதுவும் இரவு நேரத்தில் சென்றால் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்துகொண்டுதான் செல்ல வேண்டும் என நினைக்க தொடங்கி விட்டார்களாம்.

திருடர்கள் நம்மகிட்ட திருடாம இருக்க இறுக்கமான ஜீன்ஸ் போடுற மாதிரி, திருடர்கள் ஏதாவது புது டெக்னிக் யூஸ் பண்ணுவாங்கனு ஒரு பக்கம் பயமும் இருக்குனு சில பேர் நினைக்கிறார்கள். இனிமே ஜீன்ஸ்வோட விலையை ஏத்தி அதுல திருடுற கும்பலும் ஒரு பக்கம் இருக்காங்கன்னு இன்னொரு குழு யோச்சிக்கிறாங்க.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

செவ்வாய் 14 நவ 2017