மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 அக் 2017

டெங்கு கொசு: ரூ.5 லட்சம் அபராதம்!

டெங்கு கொசு: ரூ.5 லட்சம் அபராதம்!

தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நிறுவன ஊழியர் குடியிருப்புப் பகுதியில் டெங்கு கொசுப் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டதால் அந்நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், அடுத்தடுத்த மரணங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனிடையே டெங்குக் காய்ச்சலைத் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் டெங்கு ஒழிப்பு பணியில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் 15 நாள்கள் ஈடுபட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி அனைத்து மாவட்ட ஆட்சியரும் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியரும் களப்பணியில் ஈடுபட்டு, டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக இருக்கும் கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

இதே போன்று, தூத்துக்குடி ஸ்பிக் நிறுவன ஊழியர்கள் குடியிருப்பில் சுகாதாரப் பணியாளர்கள் நடத்திய ஆய்வில் மூன்று பேருக்கு வைரஸ் காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இங்குள்ள ஸ்பிக் நகர் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு டெங்கு பாதிப்பு இருந்தது உறுதியானது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ், மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்கீஸ், மாநகர நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் ஸ்பிக் ஊழியர் குடியிருப்புப் பகுதியில் நேற்று முன்தினம் (அக்டோபர் 21) ஆய்வு நடத்தினர். அங்குக் குப்பைகள் குவிந்திருந்தன. ஆங்காங்கே தேங்கி இருந்த தண்ணீரிலும், திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிகளிலும் கொசுப் புழுக்கள் காணப்பட்டன. இதையடுத்து, டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகக் காரணமாகவும், சுகாதாரப் பணிகளில் அலட்சியமாகவும் இருந்ததாக ஸ்பிக் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

திங்கள் 23 அக் 2017