தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கோரிக்கையாக இருந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் மேலும் 20 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுக்க புதிதாக 65 டோல்கேட்டுகள் அமைக்கப்பட உள்ளதாகவும், தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 20 டோல்கேட்கள் அமைக்கப்பட உள்ளன என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே மதுரை செட்டிக்குளம் நத்தம் துவரங்குறிச்சி பரளி புதூர் டோல் பிளாசா பிப்ரவரி 8-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அவினாசி திருப்பூர் வேலம்பட்டி டோல் பிளாசா மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் புதிதாக 20 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
பெங்களூரு-சென்னை விரைவு சாலையில் 6, விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3, விக்கிரவாண்டி-நாகை நெடுஞ்சாலையில் 3, ஓசூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3, சித்தூர்-தச்சூர் விரைவு சாலையில் 3, மகாபலிபுரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 என மொத்தம் 20 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கோரிக்கையாக இருந்து வரும் நிலையில் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 20 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: கோடையில் பரவும் சொரியாசிஸ்… தடுப்பது எப்படி?
Comments are closed.