தென்னை உற்பத்தியை அதிகரிக்க ரூ.20 கோடி!

Published On:

| By Kavi

பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று (மார்ச் 21) தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் தென்னைக்கான அறிவிப்பில், “தென்னையின் உற்பத்தி திறனை அதிகரித்து தேசிய அளவில் உற்பத்தியில் முதலிடம் அடையவும், தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தவும்,

தென்னை வளர்ச்சி வாரிய திட்டத்தில் வரும் ஆண்டில் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் குறித்து செயல் விளக்க திடல்கள் பத்தாயிரம் எக்டர் பரப்பிலும்,

மண்டல தென்னை நாற்றுப்பண்ணைகள் தோற்றுவித்தல், எருக்குழி தோற்றுவித்தல், மறு நடவு புத்தாக்க திட்டம் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

குட்டை நெட்டை வீரிய ஒட்டு இரக தென்னைக்கு விவசாயிகளிடத்தில் அதிக தேவை இருப்பதால் கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம், தென்காசி மாவட்டம் செங்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் தேவதானம் இடங்களில் உள்ள மாநில நாற்று தென்னை பண்ணைகளில் கூடுதலாக பத்தாயிரம் குட்டை நெட்டை வீரிய ஒட்டு இரக நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

வேளாண் பட்ஜெட்: ஆடு மாடு வளர்க்க வட்டியில்லா கடன்!

தமிழகத்தில் மிளகாய் மண்டலம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share