பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வதை தவிர்க்க கூட்ட நெரிசல் உள்ள 12வழித்தடத்தில் 20கூடுதல் பேருந்தை இயக்க சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு
சென்னையில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் காலை நேரத்தில் மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள காரணத்தினால் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில் இதை தவிர்ப்பதற்கு தொடர்ச்சியாக போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி முதற்கட்டமாக 12 வழிதடத்தில் 20 கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளனர்.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 20ஆயிரத்தில் இருந்து 22,000பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணிக்க ஏதுவாக இருக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கூட்ட நெரிசல் அதிகம் உள்ள வழித்தடங்களை கண்டறிய போக்குவரத்து துறையின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த குழு ஆராய்ந்து கூட்ட நெரிசல் அதிகம் உள்ள வழித்தடங்களை அறிவித்த நிலையில், குறிப்பிட்ட அந்த வழித்தடங்களில் மட்டும் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக
29Aபெரம்பூர் to எக்மோர்
M88 போரூர் to குன்றத்தூர்
M88 போரூர் to வடபழனி
54R ராமபுரம் to குமணசாவடி
54R ராமபுரம் to டைட்டில் பார்க்
153 சி.எம்.பி.டி to குமணசாவடி
147 தி. நகர் to அம்பத்தூர்
56A எண்ணுர் to வள்ளலார் நகர்
38A மாதவரம் to பிராட்வே
5G கண்ணகி நகர் முதல் வேளச்சேரி
21G கிண்டி to பிராட்வே
21X கிண்டி இருந்து மந்தைவெளி வழியாக பிராட்வே செல்லும் பேருந்து என மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
“மாநிலத் தலைவர் போல் செயல்படவேண்டாம்” – ஆளுநருக்கு டி.ஆர்.பாலு கண்டனம்!
