இசைவாணி, பா ரஞ்சித் மீது மேலும் 2 புகார்கள்!

Published On:

| By Minnambalam Login1

police complaint ranjith isaivaani

பாடகர் இசைவாணி மற்றும் இயக்குநரும் நீலம் பண்பாட்டு மையத்தின் இயக்குநரான பா.ரஞ்சித் மீது செம்பியம் மற்றும் திருவிக நகர் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

‘தி காஸ்ட்லஸ் கலக்டிவ்’ இசைக்குழு சார்பாக சில ஆண்டுகளுக்கு முன், ஐயப்பன் சம்பந்தமாக பாடகர் இசைவாணி பாடிய பாட்டு இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டது என்று தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில், இசைவாணி மீதும், பா.ரஞ்சித் மீதும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து நாம் விரிவாக மின்னம்பலத்தில் இசைவாணி மீது நடவடிக்கையா? அமைச்சர் சேகர் பாபு பதில்… என்ற தலைப்பில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

இது தொடர்பாக திருமாவளவிடம் நேற்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் “அந்த பாடல் மத உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கில் பாடப்பட்டது அல்ல.

ஐயப்பன் திருக்கோவிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்ற சர்ச்சை எழுந்த போது, ஒரு பெண்ணிய குரலாக, பெரியாரின் குரலாக அந்த குரல்  இசையாக வெளிவந்திருக்கிறதே தவிர, அது யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்துவதாக இல்லை. அதானி ஊழல் போன்ற விஷயங்களைத் திசை திருப்புவதற்காகவே அவர்கள் (புகார் கொடுத்தவர்கள்) தமிழ்நாட்டில் இதைப் பெரிது படுத்துகிறார்கள்.

இசைவாணியை கைது செய்ய வேண்டும் என்று சொல்வது கண்டனத்துக்குரியது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை திருவிக நகர் காவல் நிலையத்தில், அகில பாரத இந்து மகா சபா சென்னை மாவட்ட அர்ச்சகர் பேரவையின் தலைவர் ஆனந்தன் சுவாமிஜியும், அகில பாரத இந்து மகா சபையின் வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயப்பிரகாஷ், செம்பியம் காவல் நிலையத்திலும் இசைவாணி மற்றும் ரஞ்சித் மீதும் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த புகாரில் “அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டுகின்ற வகையில் நீலம் பவுண்டேஷன் நிறுவனர் இயக்குநர் பா.ரஞ்சித் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் பாடகர் இசைவாணி மதக் கலவரத்தையும் பயங்கரவாதத்தையும் தோற்றுவிக்கும் விதமாக ஐயப்பனையும் அவரை வணங்கும் பக்தர்களையும் இழிவுபடுத்துகின்ற வகையில் பாடல் பாடியுள்ளார்.

இது உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் பயங்கரவாதத்தையும் மதக் கலவரத்தையும் தூண்டுகின்ற நீலம் பவுண்டேஷன், அதன் நிறுவனர் இயக்குநர் ரஞ்சித் மற்றும் பாடகர் இசைவாணி ஆகியோரை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

மலேசியாவின் அடையாளம்… தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் மறைவு : யார் இவர்?

’நான் நயன்தாராவுடன் துணை நிற்பேன்!’ – நடிகை பார்வதி

‘பச்சன்’ குடும்ப பெயரை துறந்தாரா ஐஸ்வர்யா? : துபாயில் நடந்த அந்த சம்பவம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share