ஜெயலலிதா பிறந்தநாள்… இரண்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புறக்கணிப்பு!

Published On:

| By christopher

2 ex ministers avoid jeyalaitha bday

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி இருவரும் கலந்துகொள்ளவில்லை. 2 ex ministers avoid jeyalaitha bday

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 24) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு மாவட்டங்களில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை செய்து வருகின்றனர்.

அதன்படி ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வருகை தந்தார்.

அவருக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்த எடப்பாடி, அங்குள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து 77 கிலோ கேக் வெட்டிய அவர், கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.பி உதயகுமார், வைத்திலிங்கம், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செங்கோட்டையன், தங்கமணி மிஸ்ஸிங்! 2 ex ministers avoid jeyalaitha bday

ஆனால் முன்னாள் அமைச்சர்களும், அதிமுக மூத்த நிர்வாகிகளுமான செங்கோட்டையன் மற்றும் தங்கமணி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாதது குறித்து செங்கோட்டையன் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் அதிமுக தலைமை மீது செங்கோட்டையனுக்கும், தங்கமணிக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக கட்சி வட்டாரத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வராத இருவரும் இன்று ஈரோட்டில் உள்ள தங்களது சொந்த தொகுதியிலேயே ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஆதரவாளர்களுடன் கொண்டாடியுள்ளனர்.

முன்னதாக, சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக தலைமை வெளியிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பெயர் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share