வேலூர் மாவட்டத்தில் 2,15,025 வாக்காளர்கள் அதிரடி நீக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

voters list modification

வேலூர் மாவட்டத்தில் SIR கணக்கெடுப்புக்கு பிறகு 2,15,025 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.

ADVERTISEMENT

இதில் வழக்கம் போல் வாக்காளர்கள் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகும் மூன்று லட்சம் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். காட்பாடி, வேலூர், அனைக்கட்டு, கேவிக்குப்பம், குடியாத்தம் என அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 2,15,025 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியல் விபரம்

ADVERTISEMENT

ஆண்கள்கள் – 5,28,619
பெண்கள் – 5,59,236
மூன்றாம் பாலினம் – 150
மொத்தம் 10,88,005

இதில் அதிகபட்சமாக 58,697 வாக்காளர் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியிலும் அடுத்தபடியாக 54,565 பேர் வேலூர் தொகுதியிலும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி என்ற அடிப்படையில் புதியதாக 113 வாக்குசாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 1,427 வாக்குசாவடிகள் என எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதில் ஏற்புரைகள் மறுப்புரைகள் விண்ணப்பங்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் என ஜனவரி 18 ஆம் தேதி வரையில் இப்பணிகள் மேற்கொள்ளபடும் இறுதி வாக்காளர் பட்டியல் 17-2-2026 அன்று வெளியிடப்படும் மாவட்டத்தில் இருமுறை பதிவு மட்டும் 10,055 பேர் இரட்டை பதிவு இருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share