வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு நிறுவனங்களின் சோதனை நடவடிக்கைகளுக்கு உள்ளான பிறகு 19 நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை அதிக அளவில் வாங்கியுள்ளன. ப்ராஜக்ட் தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் சுதந்திர ஊடக நிறுவனங்கள் (Scroll.in, News Laundry, The News Minute) இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் வெளிவந்துள்ளது.
1. ஃப்யூச்சர் கேமிங் & ஹோட்டல் சர்வீசஸ் லிமிடெட் (Future Gaming and Hotel Services Private Limited)
கோவையைச் சேர்ந்த மார்ட்டினுக்கு சொந்தமானது இந்நிறுவனம். ரூ.1368 கோடி மதிப்பிற்கு தேர்தல் பத்திரங்களை இந்த நிறுவனம் நன்கொடையாக அளித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனம் இதுதான்.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| ஏப்ரல் 2022 | ஏப்ரல் 7, 2022 | 100 கோடி |
| ஜூலை 2022 | ஜூலை 6, 2022 | 75 கோடி |
| செப்டம்பர் 2022 | அக்டோபர் 6, 2022 | 105 கோடி |
| ஏப்ரல் 2023 | ஏப்ரல் 5, 2023 | 90 கோடி |
| ஏப்ரல் 11, 2023 | 60 கோடி | |
| மே 2023 | ஜூலை6, 2023 | 63 கோடி |
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களில், மார்ட்டினின் நிறுவனம் மொத்த நன்கொடையில் 509 கோடி ரூபாய்க்கான பத்திரங்களை திமுகவிற்கு அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 185 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுகவிற்கு மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் வழங்கியுள்ளது. இதே காலக்கட்டத்தில் மார்ட்டினுடன் தொடர்புடைய இடங்களில் மூன்று முறை ரெய்டு நடந்துள்ளது. இதனடிப்படையில் பார்க்கும்போது, திமுகவிற்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகள் வழங்கிய பிறகு ஃப்யூச்சர் கேமிங் நிறுவனத்தில் ரெய்டுகள் நடந்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2). மெகா என்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (Megha Engineering and Infrastructure Limited)
இந்த நிறுவனம் ஹைதராபாத்தின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனமாகும். 1.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசாங்கத்தின் பல கட்டுமான ப்ராஜக்ட்களை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் 980 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை நன்கொடையாகக் கொடுத்துள்ளது.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| அக்டோபர் 2019 | அக்டோபர் 3, 2019 | 5 கோடி |
3). வேதாந்தா லிமிடெட் (Vedanta limited)
அனில் அகர்வாலுக்கு சொந்தமான வேதாந்தா நிறுவனம் 376 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை நன்கொடையாகக் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை இந்த வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| மார்ச் 2020 | ஏப்ரல் 8, 2021 | 25 கோடி |
| ஆகஸ்ட் 2022 | ஜூலை 7, 2022 | 25 கோடி |
| நவம்பர் 14, 2022 | 110 கோடி | |
| நவம்பர் 15, 2022 | 1.75 கோடி |
4). ஹெட்டிரோ ஃபார்மா குரூப் (Hetero Pharma Group)
இந்தியாவின் மிகப் பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று இந்த ஹெட்டிரோ ஃபார்மா குரூப். இந்த நிறுவனம் 60 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் பெருமளவில் தேவைப்பட்ட ரெமிடெசிவிர் மருந்தினை இந்த நிறுவனம் தயாரித்தது. மேலும் இந்த நிறுவனம் தயாரித்த டோசிலிசுமாப் என்ற மருந்தினை கொரோனா மருத்துவத்திற்காகப் பயன்படுத்துவதற்கான அவசர அனுமதியும் வழங்கப்பட்டது.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| அக்டோபர் 2021 | ஏப்ரல் 7, 2022 | 40 கோடி |
5). ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp)
பிரபல மோட்டார் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான இந்த நிறுவனம் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி நன்கொடையாக அளித்துள்ளது.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| மார்ச் 2022 | அக்டோபர் 7, 2022 | 20 கோடி |
6). ராஷ்மி குரூப் (Rashmi Group)
இந்த நிறுவனம் 65.5 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| ஜூலை 2022 | ஜூலை 7, 2022 | 5 கோடி |
7). ரெட்டிஸ் லேப்ஸ் (Reddy’s labs)
இந்த நிறுவனம் 80 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| நவம்பர் 2023 | நவம்பர் 17, 2023 | 21 கோடி |
8). நவயுகா என்ஜினியரிங் (Navayuga Engineering)
இந்த நிறுவனம் 55 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை நன்கொடையாகக் கொடுத்துள்ளது. உத்திரகாண்ட் மாநிலத்தில் சுரங்கம் உடைந்து அதில் 41 தொழிலாளர்கள் 17 நாட்கள் மாட்டிக் கொண்டு தவித்ததை நாம் அறிவோம். அதனைக் கட்டியது இந்த நவயுகா என்ஜினியரிங் நிறுவனம் தான்.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| அக்டோபர் 2018 | ஏப்ரல் 18, 2019 | 30 கோடி |
9). ஆதித்யா பிர்லா குழுமம் (Aditya Birla Group: Utkal Alumina and Grasim Industries)
இந்த நிறுவனம் 145 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக அளித்துள்ளது.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| பிப்ரவரி 2019 | ஏப்ரல் 15, 2019 | 1 கோடி |
| ஏப்ரல் 15, 2019 | 1 கோடி | |
| ஏப்ரல் 18, 2019 | 1 கோடி |
10). யூனைட்டெட் பாஸ்பரஸ் (United Phosphorus)
இந்த நிறுவனம் 60 கோடி ரூபாய் மதிப்பிற்கான தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக அளித்திருக்கிறது.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| ஜனவரி 2020 | நவம்பர் 15, 2022 | 50 கோடி |
11). அரோபிந்தோ ஃபார்மா (Aurobindo Pharma)
ஹைதராபாத்தை மையப்படுத்திய மருந்து தயாரிக்கும் நிறுவனமான இந்த நிறுவனம் 52 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக அளித்திருக்கிறது.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| நவம்பர் 2022 | நவம்பர் 15, 2022 | 5 கோடி |
12). IFB அக்ரோ லிமிடெட் (IFB Agro Limited)
இந்த நிறுவனம் 92.3 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக அளித்திருக்கிறது.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| ஜூன் 2020 | அக்டோபர் 8, 2021 | 12 கோடி |
13). சென்னை கிரீன்வுட் பிரைவேட் லிமிடெட் (Chennai Green Wood Private Limited)
இந்த நிறுவனம் 105 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக அளித்திருக்கிறது.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| ஜூலை 2021 | ஜனவரி 5, 2022 | 40 கோடி |
14). ரங்க்டா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Rungta Sons Pvt Limited)
இந்த நிறுவனம் 100 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| டிசம்பர் 2023 | ஜனவரி 11, 2024 | 50 கோடி |
15). சீரடி சாய் எலக்ட்ரிக்கல்ஸ் (Shirdi Sai Electricals)
ஹைதராபாத்தை மையப்படுத்திய இந்த நிறுவனம் தான் ஆந்திராவில் விவசாயிகளின் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்களைப் பொறுத்தும் ஒப்பந்தத்தினைப் பெற்றிருக்கிறது. இந்த நிறுவனம் 40 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| டிசம்பர் 2023 | ஜனவரி 11, 2024 | 40 கோடி |
16). HES இன்ஃப்ரா பிரைவேட் லிமிட்டெட் (HES Infra Private Limited)
இந்த நிறுவனம் 22 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| பிப்ரவரி 2021 | ஏப்ரல் 8, 2021 | 20 கோடி |
17). ஸ்ரீ ஜெகன்நாத் ஸ்டீல்ஸ் & பவர் லிமிடெட் (Shri Jagannath Steels & Power Limited)
இந்த நிறுவனம் 14.5 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| டிசம்பர் 2020 | ஏப்ரல் 9, 2021 | 7 கோடி |
18). கல்பட்டாறு பிராஜக்ட்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் (Kalpataru Projects International Limited)
இந்த நிறுவனம் 25.5 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| ஆகஸ்ட் 2023 | ஜூலை 5, 2023 | 10 கோடி |
19). சன் ஃபார்மா (Sun Pharma)
இந்த நிறுவனம் 31.5 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
| ரெய்டு தேதி | பத்திரம் வாங்கிய தேதி | மொத்த பணம் |
| மே 2019 | மே 8, 2019 | 10 கோடி |
– விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அன்புமணிக்கு திடீர் ஆஃபர்: பாஜகவின் இறுதி முயற்சி!
ஆந்திரா: ஜெகன்மோகன் மீண்டும் வெல்ல வாய்ப்பு இருக்கிறதா?
