’இந்த 186 மருந்துகளை பயன்படுத்தாதீங்க’ – மத்திய அரசு வெளியிட்ட பட்டியல்!

Published On:

| By christopher

186 NSQ drugs list released by CDSCO

தரச் சோதனையில் தோல்வியடைந்த 186 மருந்துகளை தரமற்றவையாக அறிவித்து அதன் பட்டியலை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) வெளியிட்டது. 186 NSQ drugs list released by CDSCO

நாட்டில் பல்வேறு நோய்களுக்கு விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து நிறுவனங்களின் மாத்திரைகளும் அவ்வபோது மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

அதன் மூலம் போலி மருந்துகள் கண்டறியப்பட்டு, அதன் பட்டியல் CDSCO இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் எச்சரிக்கையின்படி நாடு முழுவதும் கடந்த மாதம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

ADVERTISEMENT

இந்த தரச் சோதனையில் 186 மருந்துகள் நிலையான தரம் இல்லாதவை (NSQ) என கண்டறியப்பட்டன. மொத்தமுள்ள 186ல் 128 பல்வேறு மாநில மருந்துகள் ஆய்வகங்களிலும், 58 மத்திய மருந்து ஆய்வகங்களிலும் தகுதியற்றவை என அடையாளம் காணப்பட்டன.

ADVERTISEMENT

இந்த மருந்துகள் பெரும்பாலும் சளித் தொற்று, கிருமித் தொற்று, காய்ச்சல், உயா் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படுபவை என கண்டறியப்பட்டது. இதன்மூலம் இந்த ஆண்டில் தரமற்றவையாக இதுவரை கண்டறியப்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை 561ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் நேற்று வெளியானது.

இதனை பொதுமக்கள் இந்த விவரங்களை அந்தத் தளத்தில் அறிந்து கொண்டு விழிப்புணா்வுடன் செயல்படலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share